VizhippuFM News 20-03-2008

வாசகர்களின் கவனத்திற்கு

Blin_lys.gifஇன்று இடம்பெறும் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் முடிவுகள் ஐரோப்பிய நேரம் இரவு 10.00 மணிமுதல் எமது விழிப்பு இணையத்தளத்தில் உடனுக்குடன் வெளியிடப்படும் என்பதனை வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம். நிர்வாகம் விழிப்பு

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருணா மீது வழக்கு தொடர போதிய ஆதாரம் இல்லை என பிரித்தானிய அரசு தரப்பு கூறியுள்ளது

சுறாவைப் பிடிக்க வக்கற்ற சர்வதேச மன்னிப்புச் சபை இறாலைப் பிடிக்க முயற்சி சர்வதேச மன்னிப்புச் சபை என்னும் பெயரில் இயங்கும் மேற்குலக நாடுகளின் எடுபிடிகள் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் இடம்பெறும் மனித உரிமைமீறல்களை கண்டுகொள்வதில்லையா? அன்றி மேற்குலகம் வழங்கும் உதவித் தொகையினைப் பெறுவதற்காக அவைகளை தெரிவிப்பதற்கு தயங்குகின்றனரா?

லஞ்சம் கொடுத்து வாக்குகளைப் பெறும் முயற்சியில் ரவூப் ஹக்கீமின் மனைவியார்

கொழும்பில் வாழ்ந்துகொண்டு மேற்குலக கலாச்சாரத்தில் மூழ்கியிருக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் துணைவியார் வாக்கு வேட்டைக்காக தமது வழமையான வடிவத்தினை மாற்றிக் கொண்டுள்ளார். மொக்காடு என்பது அவருக்கு தெரிந்திராத விடயமாக இருந்தபோதும் மக்களை ஏமாற்றுவதற்காக அந்த வேடத்தினை அவர் தமதாக்கிக் கொண்டுள்ளார்.

பேரியல் அ\ரப் அவர்களை இலக்குவைத்து புலிப்பயங்கரவாதிகள் அம்பாறையில் குண்டுத் தாக்குதல்

Ferial_Ashrof.gifஅம்பாறையில் சற்று நேரத்துக்கு முன்னர் புலிப்பயங்கரவாதிகளால் பேரியல் அ\ரப் அவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்கதலில் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார் அதேவேளை 8 பேர் பலியானதுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஷ்யாவின் பிரதமராக முன்னாள ஜனாதிபதியான புடின் பதவியேற்பு

ரஷ்யாவின் பிரதமராக,விளாடிமிர் புடின், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ரஷ்ய அதிபராக இருந்த, புடினின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, புடினின் ஆதரவாளர் மெட்வதேவ், அடுத்த அதிபராக தேர்வானார். நேற்று முன்தினம் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். ரஷ்யா தொடர்ந்து, தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது புடினின் விருப்பம். இதற்கு ஏற்றவாறு, பிரதமர் பதவிக்கு அவரது பெயரை, அதிபர் மெட்வதேவ் முன்மொழிந்தார்.

வடமாகாணத்திலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்ட புளொட் அமைப்பினர் இணைந்த புதிய புலிக்கூட்டமைப்பு கிழக்கில் ஆக்கிர

சர்வதேசப் பயங்கரவாதியான பிரபாகரன் தலைமையிலான பாஸிஸப் புலிகளிடமிருந்து பல ஆயிரக்கணக்கான கிழக்கு மைந்தர்களின் உயிர் தியாகத்தின் மத்தியில் மீட்கப்பட்டுள்ள கிழக்க மாகாணத்தினை ஆக்கிரமிப்பதற்கு புதிய புலிக்கூட்டணி கடந்த மார்ச் 10 ந் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வியடைந்தது.

பிரபாகரனின் நண்பர்களான ஐ.தே.கட்சியினரால் எரிக்கபட்ட யாழ் நூலகம் ஆவணபடமாகிறது

பிரபாகரனதும் தமிழ் புலிக்கூட்டமைப்பினரதும் நண்பர்களான ஐ.தே கட்சியினரால் 1981 ம் ஆண்டு மே மாதம் 31 ந் திகதி எரிக்கப்பட்ட யாழ் நூலகம் பற்றிய "எரியும் நினைவுகள்" என்ற ஆவணபடம் தயாரிக்கபட்டுள்ளதாக தெரியவருகிறது.

அடம்பன் நகர் படையினர் வசம் பிரிகேடியர் உதய நாணாயக்கார தகவல்

பிரபாகரன் தலைமையிலான பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த மன்னார் பிரதேசத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் படையினர் இன்று காலை 8.30 மணியளவில் அடம்பன் நகரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். இன்று காலை நடைபெற்ற மோதலில் 15 புலிகள் கொல்லப்பட்டதாகவும் படைத்தரப்பில் இருவர் உயிரிழந்ததோடு மற்றும் 7 பேர் காயமுற்றதாகவும் பிரிகேடியர் மேலும் கூறினார்.

கிழக்கின் பிரஜைகள் சிந்திக்கவேண்டிய கடைசித் தருணங்கள்.

நாளை இடம்பெற இருக்கின்ற (10-05-08)கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலானது கிழக்கு மாகாண மக்களின் தலைவிதியினை மட்டுமல்ல எதிர்கால இலங்கை அரசியலின் தலைவிதியினையே தீர்மானிக்கப்போகின்ற ஒரு முக்கிய வரலாற்றுக் கட்டமாகும். காரணம் இன ஐக்கியம் சீர்குலைக்கப்பட்டு இரத்த ஆறு ஓடிய கிழக்கு மாகாண மண்ணில் இன்று அமைதி திரும்பியுள்ளது.

கிழக்கின முதல்வர் வாழ்க என்னும் கோசம் வானைப் பிளந்தது.

சுமார் 20 வருடங்களாக அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு ராணுவத்தினரிடம் வசப்படுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு மாநகர சபையின் காரியாலயம் மற்றும் வெபர் மைதானம் போன்றவை நடந்து முடிந்த உள்ளராட்சித் தேர்தலை அடுத்த ரீ.எம்.வி.பியினரினர் விடுத்த வேண்டுகோள் உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட்டதன் காரணமாக மாநகர சபைக்கான அலுவலகம் முழுமையாக ஒப்படைக்கப

கேரள நடிகர்களை மிரள வைத்த விஜய்

நடிகர் விஜய், திரிஷா நடித்துள்ள `குருவி' படம் கடந்த (3-ந் தேதி) ரிலீஸ் ஆகியது. டைரக்டர் தரணி இயக்கியுள்ள இப்படத்ததுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். அமைச்சர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி தயாரித்துள்ளார்.

குஷ்பு இடத்தை பிடிக்க முடியாது -சிம்ரன்

சிம்ரன் திருமணத்திற்கு பிறகு டி.வி. தொடரிலும் சினிமாவிலும் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- நான் திருமணத்திற்கு பிறகு 3 ஆண்டு கழித்து நடிக்க வந்துள்ளேன். நான் நடிப்பதற்கு அதிக சம்பளம் கேட்பதாக சிலர் வதந்தி பரப்பியுள்ளனர். அது தவறு. நான் நல்ல படம் என்றால் குறைந்த சம்பளம்தான் வாங்குகிறேன்.

சிலர் என்னிடம் குஷ்பு இடத்தை உங்களால் பிடிக்க முடியவில்லையே என்கிறார்கள்.

ஸ்ரேயாவின் அழகு ரகசியம்?

எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவதில் ஸ்ரேயாவுக்கு நிகர் ஸ்ரேயாதான். அவர் மனதில் உள்ளதை பட்டென பேசி விடுவார். இதனால் அவர் பல தடவை சர்ச்சைகளில் சிக்கி உள்ளார்.

எந்நேரமும் கலகலப்பாக உலாவரும் ஸ்ரேயாவிடம் அவரது அழகு ரகசியமும் பற்றி கேட்டோம். அதற்கு அவரது பதில். நடிகைகளுக்கு அழகு இருந்தால் மட்டும் போதாது. நல்ல உடல் ஆரோக்கியம் அவசியம்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்க முடியும்.

ரஜினிக்கு விஜய் டி.வி.யின் "அபிமான ஹீரோ' விருது

கடந்த 2007 முதல் ஆண்டுதோறும் விஜய் டி.வி. சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகளை வழங்கி வருகிறது. பொதுமக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பெருவாரியான ரசிகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த் "அபிமான ஹீரோ' விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கவர்ச்சிக்கு மாறிய தென்னிந்திய நடிகைகள்- ஸ்ரேயா

Sreya_0.jpgகவர்ச்சி நடிப்பால் ரசிகர்கள் மனதை சிறை பிடித்தவர் ஸ்ரேயா. இவர் தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கி வருகிறார்.இது தவிர தற்போது "தி அதர் என்ட் ஆப் திலைன்'' என்ற ஆங்கில படத்தில் நடிக்கவும் ஸ்ரேயா ஒப்புக்கொண்டுள்ளார்.

ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பின் போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

முரளிதரன் சொந்த மண்ணில் உலகச் சாதனை படைப்பதை முன்னிட்டு முத்திரை வெளியீடு!

Murali.jpgஇலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் கிரிக்கட் டெஸ்ட் போட்டி இன்று கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இடம்பெறுகின்றது டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களைப் பெற்றுள்ள அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்னின் உலக சாதனையை முரளிதரன் இப்போட்டியில் முறியடித்து விடுவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

இலங்கை அணி 119 ஓட்டங்களால் அபார வெற்றி! மஹ்ரூப் ஆட்டநாயகன்!

Cricket.jpg இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 119 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இப்போட்டி நேற்று (ஒக்டோபர் 01) இலங்கையின் தம்புள்ள ரங்கிரி விiயாட்டரங்கில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

உலகக்கின்ண பரிசுத் தொகையாக இலங்கைக்கு 11 கோடி.

cricket_wrold_cup.jpgஉலகக்கிண்ணத்தை மூன்றாவது தடவையாகவும் தொடர்ச்சியாக வென்ற அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு 2.24 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதேவேளை உலகக்கிண்ணத்தில் இரண்டாவது இடத்தை பிடித் இலங்கை அணிக்கு 11 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள


Syndicate content Syndicate content