ஆனந்தசங்கரி அண்ணருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

anandasangari0055_0.jpgபுலிப்பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்களை (முக்கியமாக தமிழ்மக்களை) விடுவிப்பதற்காக தாங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதே. அதற்காக நீங்கள் சர்வதேசரீதியாகலவும், தேசியரீயாகவும் அயராது மேற்கொள்ளும் பணிகள் ஓரளவு பலனைத்தந்துள்ளது. அதேவேளை சர்வதேசக் கொலைகாரனான பிரபாகரனிடம் நீங்கள் மகஜர்மூலம் வேண்டுகோள் விடுப்பதற்காக விரையமாக்கும் பொன்னான நேரத்தை வேறு வழியில் பயன்படுத்துமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டுமே தவிர அதற்கு மூலிகை கட்டிக்கொண்டு கட்டிலில் தூங்கமுடியாது அது தற்காலத்திற்கு பொருத்தமானதல்ல ஆண்டவன்கூட நேரடித் தரிசனம் வழங்கி பிரபாகரன் என்னும் மனிதவேட்டைக்காரனிடம் வேண்டுகோள் விடுத்தால்கூட அவன் தனது கொலைவெறியினை ஒருபோதும் நிறுத்தமாட்டான் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.ஆகவே அதற்கான பரிகாரத்தினை எவ்வழியில் அணுகுவதன்மூலம் வெற்றிகொள்ளலாம் என்பதனை நான்கூறித்தான் நீங்கள் அறிந்து கொள்ளுமளவிற்கு உங்களைவிட நான் விவேகியல்ல. நீங்கள் பிரபாகரனுக்கு எழுதிய பல மகஜர்களை ஏற்கனவே எனக்கு அனுப்பிவைத்து அவற்றினை எனது இணையத்தளத்தில் பிரசுரிக்குமாறு கேட்டிருந்தீர்கள் இந்நிலையில் தாங்கள் அனுப்பிய பிரபாகரன் சம்பந்தப்பட்ட எந்தவொரு மகஜரையும் நான் பிரசுரிக்கவில்லை தொடர்ந்தும் அதனை நான் செய்யமாட்டேன் என்பதனை வினயமாக தெரிவிப்பதுடன் என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்தினை ஏற்பதும் நிராகரிப்பதும் தங்களின் அரசியல் நடவடிக்கை சார்ந்ததென்பதனையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இவ்வண்ணம் ---விழிப்ப ஆசிரியர்.