![]()

இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் இலங்கைத் தமிழரும் ஒரேயொரு அமைச்சருமான திரு டக்ளஸ் தேவானந்தா அவர்களை (28-11-2007)ந் திகதியன்று படுகொலை செய்வதற்கு பாஸிஸவாதியான பிரபாகரனால் அனுப்பிவைக்கப்பட்டு தற்கொலைத் தாக்குதல் நடாத்திய செயலைக் கண்டித்து இன்று பிற்பகல் 3.00 மணிக்கும் 5.30மணிக்குமிடையில் ஊர்வலமொன்று நடாத்தப்பட உள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பணியகத்திற்கு முன்னால் இந்த ஊர்வலம் இடம்பெறுகின்றது. தனது சுய அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக அப்பாவி இளம் பெண்களின் உயிர்களை பலிகொள்ளும் பாஸிஸவாதியின் பிடியிலிருந்து எமது தாயக உறவுகளை பாதுகாக்க முன்வரும் மனிதநேயம் கொண்ட அனைவரையும் இக்கண்டன ஊர்வலத்தில் பங்குகொள்ளுமாறு விழிப்பு நிர்வாகம் வினயமாக வேண்டுகோள் விடுக்கின்றது.