கவர்ச்சிக்கு மாறிய தென்னிந்திய நடிகைகள்- ஸ்ரேயா

Sreya_0.jpgகவர்ச்சி நடிப்பால் ரசிகர்கள் மனதை சிறை பிடித்தவர் ஸ்ரேயா. இவர் தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கி வருகிறார்.இது தவிர தற்போது "தி அதர் என்ட் ஆப் திலைன்'' என்ற ஆங்கில படத்தில் நடிக்கவும் ஸ்ரேயா ஒப்புக்கொண்டுள்ளார்.

ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பின் போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
நான் ரஜினியுடன் நடித்த சிவாஜி படம் உலகம் முழுவதிலும் பெரும் வெற்றி பெற்றது. இதனால் எனக்கு வெளிநாடுகளிலும் நல்ல பெயர் கிடைத்தது. நிறைய சினிமா வாய்ப்புகளும் வந்தன.

நான் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளேன். ஒவ்வொரு மொழியிலும் தலை சிறந்த இயக்குனர்கள் இயக்கியதால் படம் சூப்பர் ஹிட்டானது.சிவாஜியை பொறுத்த வரையில் படம் பிரமாண்டமாகவும், அதே சமயத்தில் கலகலப்பாகவும் இருந்தது. அதில் ரஜினியின் காமெடி பிளஸ். ஆக்ஷன், நடிப்பு பிரமிப்பாக இருந்தது.

அவருடன் சேர்ந்து நடித்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அவருடன் இன்னொரு படத்தில் நடிக்கவும் ஆசையாக உள்ளது.எனது வாழ்க்கையில் சில கசப்பான சம்பவமும் நடந்துள்ளது. அதிலும் என் மனதை கடுமையாக பாதித்த சம்பவம் சமீபத்தில் திருப்பதியில் நடந்த சம்பவம்தான்.

ஒரு நடிகை என்றும் பாராமல் திருப்பதி கோவில் ஊழியர் என்னை பொது இடத்தில் வைத்து இடுப்பை கிள்ளினார். இது எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது. உடனே அந்த ஊழியரைப் பிடித்து கன்னத்தில் அறைந்தேன்.

நடிகைகளுக்கு சுய மரியாதை அவசியம். நடிகைகள் பொது இடத்தில் அவமதிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.முன்பெல்லாம் தென்னிந்திய நடிகைகள் கவர்ச்சியான உடை அணிந்து நடிக்க தயக்கம் காட்டுவார்கள். ஆனால் தற்போது அவர்கள் இமேஜ் பற்றி கவலைப்படுவதில்லை. தாராளமாக கவர்ச்சி காட்டுகிறார்கள். தமிழ், தெலுங்கு திரையுலகில் உடை விஷயத்தில் நடிகைகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.