புலிப்பயங்கரவாதிகள் போடும் பிச்சைக்காக பொய்யை மட்டும் கூறும் தமிழக அரசியல்வாதியென தம்மை அடையாளப்படுத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிங்களப் படையுடன் சேர்ந்து இயங்கும் கருணா குழுவினர் தமிழ்நாட்டில் ஊடுருவி தமிழகத் தலைவர்களைக் கடத்தி, விடுதலைப்புலிகள் மீது பழி போட சதி நடக்கிறது என்று இந்திய அரசின் உளவுப் பிரிவு தமிழ்நாடு காவல் துறைக்கு எச்சரிக்கை செய்துள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியுள்ளது.
திருமாவளவன்போன்ற தேசியத் துரோகிகள் சிலரினால் குறிப்பிடப்படும் செய்தியினை வெளியிட்ட தினத்தந்தி என்னும் இணைய ஊடகம் அச்செய்தியினை சில மணித்தியால இடைவெளியிலேயே அகற்றியதன் மர்மமென்ன? அதற்கான விளக்கத்தினை அச்செய்திக்கு முக்கியத்துவம் வழங்கி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்னும் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள்மீது சேறடிக்க முற்பட்ட திருமாவளவன் தெரிவிப்பாரா? அத்துடன் அச்செய்திபற்றி பறைசாற்றுவதற்காக பிரபாகரன் தலைமையிலான புலிப்பயங்கரவாதிகளிடம் திருமாவளவன் வாங்கிய லஞ்சம் எவ்வழவு?
சிங்களப் படையினருடன் இணைந்து இந்திய அமைதிகாக்கும் படையினர் 1.500 ராணுவத்தினரை படுகொலைசெய்த துரோகிகளை தமிழீழப் போராளிகள் என திருமாவளவன்போன்ற தேசியத் துரோகிகள் வெளிக்காட்ட முன்வருவது பாரத மாதாவிற்கே ஒரு சாபக்கேடாகும்.
ஒவ்வொரு முறையும் சிங்களப் படையினர் விடுதலைப்புலிகளால் பெரும் பாதிப்பிற்கும், இழப்பிற்கும் ஆளாகும்போதெல்லாம் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அரசியல் நகர்வுகள் நிகழ்வதுண்டு. எடுத்துக் காட்டாக, கடந்த வாரம் முகமாலைப் பகுதியில் நடந்த மோதலில் நூற்றுக்கணக் கான சிங்களப் படையினர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழலில்தான் இந்திய உளவுப்பிரிவு இவ்வாறான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
சிங்களப் படையினர் அல்ல அவர்கள், பல்லின மக்கள் வாழும் இலங்கைத்தீவினை பிரபாகரன் தலைமையிலான சர்வதேசப் பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்கும் பாதுகாப்புப் படையினர் என்பதனை புலி போடும் பிச்சைக்காக வக்காலத்து வாங்கும் திருமாவளவனுக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றோம்
இத்தனை ஆண்டு காலம் தமிழ்நாட்டில் புலிகள் ஊடுருவல் என்ற செய்தியை பல நூறு முறை தமிழ்நாட்டின் ஊடகங்களில் உலவவிட்ட இந்திய உளவுப்பிரிவு முதன் முறையாக கருணா பிரிவு ஊடுருவல்-தலைவர்களைக் கடத்திப் புலிகள் மீது பழி போட முயற்சி என்று கரிசனம் காட்டியுள்ளது.
கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் தலைமையிலான த.ம.வி.புலிகள் அமைப்பினர் பிரபாகரன் தலைமையிலான பாஸிஸப் புலிகள்போன்ற பயங்கரவாத அமைப்பினர் அல்ல அவர்களை எந்தவொரு நாடும் பயங்கரவாதிகளென முத்திரை குத்தவுமல்ல, குத்தவும் முடியாது காரணம் அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் பாரிய வெற்றியீட்டி தமது ஜனநாயக செயற்பாடுகளை நிலை நிறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் ஊடுருவல் என்று ஆட்சியை கவிழ்த்தவர்கள். தமிழ்த்தேசிய தலைவர்களை தடாவிலும் பொடாவிலும் ஆண்டுக்கணக்கில் சிறை யிலடைத்தவர்கள். இப்போது புலிகள் மீது பழிபோடப் போகிறார்களே என்று கலங்குகின்றனர்.
தமிழ்நாட்டில் புலிப்பயங்கரவாதிகள் ஊடுருவியது மட்டுமல்ல பாரதத்தின் பிரதமரையே படுகொலைசெய்த துரோகிகளாவர். அத்துடன் பாதுபாப்பின் நிமித்தம் தஞ்சம்கோரி தமிழகத்தில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல் அமைப்பின் தலைவர் பத்மநாபா உட்பட 11 பேரை படுகொலைசெய்த பயங்கரவாதிகள்தான் பிரபாகரன் தலைமையிலான புலிக்கூட்டம்.என்பதனை புலியின் அடிவருடியும் தமிழகப் பயங்கரவாதியுமான திருமாவளவனுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.