ஸ்ரேயாவின் அழகு ரகசியம்?

எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவதில் ஸ்ரேயாவுக்கு நிகர் ஸ்ரேயாதான். அவர் மனதில் உள்ளதை பட்டென பேசி விடுவார். இதனால் அவர் பல தடவை சர்ச்சைகளில் சிக்கி உள்ளார்.

எந்நேரமும் கலகலப்பாக உலாவரும் ஸ்ரேயாவிடம் அவரது அழகு ரகசியமும் பற்றி கேட்டோம். அதற்கு அவரது பதில். நடிகைகளுக்கு அழகு இருந்தால் மட்டும் போதாது. நல்ல உடல் ஆரோக்கியம் அவசியம்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்க முடியும்.

அதனால் தான் நான் எனது உடல் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன்.உணவு விஷயத்தை பொறுத்தவரை நான் பச்சை காய்கறி-பழங்கள் அதிகம் சாப்பிடுகிறேன். நிறைய பழ ஜுஸ் குடிப்பதுண்டு.

எங்கு போனாலும் வெந்நீர் மட்டும்தான் குடிப்பேன். பெரும்பாலும் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளைத்தான் சாப்பிடுவேன். தினமும் 1 மணி நேரத்திற்கு குறையாமல் உடற்பயிற்சி, மற்றும் யோகா செய்கிறேன். சில சமயம் நடனமும் ஆடுவேன். இது மனதிற்கு உற்சாகத்தை தருவதுடன் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

பெரும்பாலும் பெண்களைப் பொறுத்தவரையில் அழகாய் இருந்தால் தன்னம்பிக்கை வரும். இல்லையென்றால் எதோ ஒன்றை இழந்தது போல் இருக்கும். இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.