அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மூத்த மகள் ஜென்னா புஷ்ஷுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது.

சில மாதங்களுக்கு முன், ஜென்னாவின் காதலர் ஹென்ரி ஹாகர், தனது திருமண முடிவு குறித்து புஷ் தம்பதியிடம் தெரிவித்தார். இதற்கு புஷ் குடும்பத்தார் பச்சைக்கொடி காட்டினர். இதைத் தொடர்ந்து, புஷ் அளித்த விருந்தில் பங்கேற்ற ஹென்ரி, தனது திருமணத்துக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கக் கேட்டுக் கொண்டார். இதற்கும் புஷ் தம்பதியர் சம்மதம் அளித்து விட்டனர். இந்த திருமணத்தை, தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை. டெக்சாஸ் மாகாணம் கிராபோர்டில் உள்ள புஷ்ஷின் 1,600 ஏக்கர் பண்ணை வீட்டில் இந்த திருமண விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.