கிழக்கு மாகாண சபை மூலம் சகல பிரதேசங்களிலும் சமத்துவமான பணி – த.ம.வி.பு. பதில் தலைவர் பிள்ளையான் தெரிவிப்பு.

கிழக்கின் அபிவிருத்தியை துரித கதியில் முன்னெடுக்கவும் இன ஒற்றுமையை ஏற்படுத்தவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கரத்தைப் பலப்படுத்த கிழக்கு மக்கள் முன்வர வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பதில் தலைவரும் ஐ.ம.சு. முன்னனியின் முதன்மை வேட்பாளருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலுயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தலிலே நாம் வெற்றிபெறுவது நிச்சயிக்கப்பட்டு விட்டது அதன் மூலமாக சகல அதிகாரங்களையும் மத்திய அரசியடமிருந்து பெற்று கிழக்கு மக்களி;ன் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, இன ஒற்றுமை போன்றவற்றை செவ்வனே நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் கூறியதுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் ஏனைய சமூகத்துக்கு நன்மைகள் கிடைக்காது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழக்கூடாது. காரணம் நாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் நாம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் நாம் மட்டும் வந்து விட்டதாக அர்த்தமல்ல எமது முன்னனியில் தமிழ், முஸ்லிம், சிங்கள வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள் வெற்றி பெற்றால் மூவினத்திலுள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வருவார்கள் அதனால் மூவின மக்களுக்கும் நம்மை ஏற்படும் என கூறியதுடன் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என அவர் மேலும் தெரிவித்தார் இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் ஆஸாத் மௌலானா வாக்களிப்பின் அவசியம் குறித்தும் அதன் சாதகங்கள் குறித்தும் மக்களுக்கு விளக்கமளித்தார்.