வாகன போக்குவரத்துகான உலகின் அதிநீள கடல் மேம்பாலம் சீனாவில் அமைக்கபட்டுள்ளது. சீனாவில் யாங்சீ ஆறு டெல்டா பகுதியிலேயே இந்த கடல் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.சீனாவின் பல்வேறு பகுதிகளை அந்நாட்டின் முக்கிய தொழில் நகரமான ஷாங்காயுடன் இணைக்கும் இப்பாலத்தின் நீளம் 32.5 கிலோ மீற்றர்களாகும். இந்தப் பாலத்தின் மூலம் சீனாவின் ஹையான், ஜியாஜிங், சிக்ஸி, நிங்போ ஆகிய நகரங்களில் துரித பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மேம்பாலத்தில் பரீட்சாத்த வாகனப்போக்குவரத்து விரைவில் அனுமதிக்கப்படும் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பாதுகாப்பான போக்குவரத்தை கருத்தில் கொண்டு ட்ரக்குகள், கனரக மற்றும் ஆபத்தான கெமிக்கல் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் என்பன இந்தப் பாலத்தினூடாக பயணிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்றும் அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.