கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக உள்ளுர் மற்றும் சர்வதேச சமூகத்தினர் அறிந்துகொள்ள உதவும் வகையில் கிழக்கின் நவோதயம் எனும் இணையத்தளம் இன்று அரசினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் மீளக் குடியமர்ந்த தகவல்கள், வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள், கட்டட நிர்மாணம், மின் விநியோகம் உட்பட பலதரப்பட்ட தகவல்களை இந்த இணையத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும். நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படும் விபரங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட ஊக்குவிப்புப்புக்கள் பற்றிய தகவல்கள் என்பவற்றை இந்த இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம். (www.neweast.lk) என்பது இந்த இணையத்தளத்தின் முகவரியாகும்.