
படுவான்கரைப் பிரதேசங்களில் கிராமங்கள் தோறும் நடைப்பயணமாக ரீ.எம்.வி.பியினரின் பிரச்சார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. திரு சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் தமது வேட்பாளர்களை வெற்றியயீட்டச் செய்வதற்கான இறுதிக்கட்டப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர். கிராமம் கிராமமாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டு அறிவதுடன் நடமாடும் வீதியோரப் பிரச்சாரங்களில் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். வவுணதீவு, ஆயித்திய மலை, பிரதேசங்களை அண்டிய கிராமங்களில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் மேற்படி பிரச்சாரங்கள் இடம்பெற்றன.