

சுமார் 20 வருடங்களாக அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு ராணுவத்தினரிடம் வசப்படுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு மாநகர சபையின் காரியாலயம் மற்றும் வெபர் மைதானம் போன்றவை நடந்து முடிந்த உள்ளராட்சித் தேர்தலை அடுத்த ரீ.எம்.வி.பியினரினர் விடுத்த வேண்டுகோள் உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட்டதன் காரணமாக மாநகர சபைக்கான அலுவலகம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டமை தெரிந்ததே. கடந்த ஞாயிறு அன்று (04-05-08) மேற்படி வெபர் மைதானத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரமாண்டமான பிரச்சாரக் கூட்டமொன்று இடம்பெற்றது. கடும் வெயிலிலும் சுமார் 4.000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் மைதானத்தில் கூடியிருந்தனர். பிரச்சார நிகழ்வுகளுக்கு தலைமையேற்று மட்டக்களப்பு மாநகர சபையின் முதல் பெண் மேயரான சிவகீதா பிரபாகரன் அவர்கள் நடாத்தினார்.
முதன்மை வேட்பாளர் திரு சந்திரகாந்தன் உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்கள் மைதானத்தில் வந்திறங்கியதும் குழுமியிருந்த மக்களிடமிருந்து கிழக்கின் முதல்வர் வாழ்க என்னும் கோ\ம் வானைப்பிளந்து ஒலித்தது. முற்றவெளி எங்கும் ஓங்காரமிட்டு ஒலித்த அந்தக் கோ\மானது கிழக்கின் முதலமைச்சராக வரவிருக்கும் திரு சந்திரகாந்தன் அவர்களின் வெற்றியை உறுதி செய்தது எனலாம். அங்கு உரையாற்றிய சந்திரகாந்தன் அவர்கள் கூறும்போது ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு இடப்படுகின்ற ஒவ்வொரு வாக்கும் வன்னிப் புலிகளின் பயங்கரவாதத்தினை கிழக்கு மண்ணில் மீண்டும் எற்படுத்தவே வழிகோலும் என்றார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் அதன் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் இடப்படுகின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் கிழக்கின் இன ஐக்கியத்தினையும், அமைதியினையும் வலுப்படுத்த அளிக்கப்படுகின்ற வாக்குகளாக அமையுமென தெரிவித்தார்.