அடம்பன் நகர் படையினர் வசம் பிரிகேடியர் உதய நாணாயக்கார தகவல்

பிரபாகரன் தலைமையிலான பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த மன்னார் பிரதேசத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் படையினர் இன்று காலை 8.30 மணியளவில் அடம்பன் நகரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். இன்று காலை நடைபெற்ற மோதலில் 15 புலிகள் கொல்லப்பட்டதாகவும் படைத்தரப்பில் இருவர் உயிரிழந்ததோடு மற்றும் 7 பேர் காயமுற்றதாகவும் பிரிகேடியர் மேலும் கூறினார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் மன்னார் பிரதேசத்தில் மனிதாபிமான நடவடிக்கைளை படையினர் ஆரம்பித்தனர். அதன் பிரதிபலனாகவே இன்று அடம்பன் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது படையினருக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். அதேவேளை புலிகளுக்கு கிடைத்த பெரும் தோல்வியுமாகும் என்றும் பிரிகேடியர் மேலும் கூறினார்.