பிரபாகரனின் நண்பர்களான ஐ.தே.கட்சியினரால் எரிக்கபட்ட யாழ் நூலகம் ஆவணபடமாகிறது

பிரபாகரனதும் தமிழ் புலிக்கூட்டமைப்பினரதும் நண்பர்களான ஐ.தே கட்சியினரால் 1981 ம் ஆண்டு மே மாதம் 31 ந் திகதி எரிக்கப்பட்ட யாழ் நூலகம் பற்றிய "எரியும் நினைவுகள்" என்ற ஆவணபடம் தயாரிக்கபட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறுவட்டில் தயாரிக்கபட்ட இந்த ஆவணபடம் 50 நிமிடங்கள் ஓடக்கூடிய நீளபடமாகும்.யாழ் நூலகம் எரியூட்டபட்ட 27 ஆவது ஆண்டு நிறைவு நாளான 31.05.08 அன்று உலகம் எங்கும் இந்த ஆவணபடம் வெளியிடபட உள்ளதாகவும்.1933 ஆம் ஆண்டிலிருந்து தற்போதைய நிகழ்காலம்வரையான நூலகத்தின் வலிமிகுந்த வரலாறு இந்த ஆவணபடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் யேர்மன் மொழிகளில் இந்த திரைபடம் மொழியாக்கம் செய்யபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

மேற்படி திரைப்படத்தில் பிரபாகரனின் நண்பாகளான ஐக்கிய தேசியக் கட்சியினரால் தீயிட்டு நாசமாக்கப்பட்ட நூல் நிலையத்தினை மீண்டும் புதுப் பொலிவுடன் ஸதாபிப்பதற்கு 380 மில்லியன் ரூபா நிதியுதவியினை வழங்கிய சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரின் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதும் அவசியமாகும். அத்துடன் நிர்மாணப் பணிகள் முடிவுற்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படவிருந்த நூல் நிலையத்தின் சாவிக் கொத்துக்களை புலிப்பயங்கரவாதிகள் ஆயுதமுனையில் அபகரித்துச் சென்றமையும் இடம்பெறவேண்டியது வரவேற்கத்தக்கதாகும். அன்றைய யாழ் மாநகர மெயராக பணியாற்றிய திரு செல்லன் கந்தையா அவர்கள் ஒரு சிறுபான்மை (தலித் சமூகம்) இனத்தைச் சோந்தவரென்னும் காரணத்தால் அவரால் நூல் நிலையத் திறப்பு விழா இடம்பெறக்கூடாது என்னும் காரணத்தால் அவரிடமிருந்த சாவிக் கொத்துக்கள் ஆயுதமுனையில் அபகரிக்கப்பட்டமையையும் தெரிவிப்பது கட்டாயமாகும்.

அதேவேளை இக்குறும் படத்தினை பிரபாகரனின் தற்கால நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பர்களான ரணில் விக்கிரமசிங்கா, ரவூப் ஹக்கீம் மற்றும் புலிக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோரால் முதலாவது வெளியீட்டினை ஆரம்பித்து வைப்பது பொருத்தமானதாக அமையுமெனவும் அதன்மூலம் பெருவாரியான நிதியினை புலம்பெயர் புலிகளிடம் அறவிடமுடியுமெனவும் சிலர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலி தனது இறுதிச் சவப்பெட்டியினை தயார்செய்துவிட்ட நிலையில் பழையன புகுதலும் புதியன மறைதலும் என்னும் நிகழ்வுகள் வன்னியில் மேற்கொள்ளப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.