
சர்வதேசப் பயங்கரவாதியான பிரபாகரன் தலைமையிலான பாஸிஸப் புலிகளிடமிருந்து பல ஆயிரக்கணக்கான கிழக்கு மைந்தர்களின் உயிர் தியாகத்தின் மத்தியில் மீட்கப்பட்டுள்ள கிழக்க மாகாணத்தினை ஆக்கிரமிப்பதற்கு புதிய புலிக்கூட்டணி கடந்த மார்ச் 10 ந் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வியடைந்தது. அத்தோல்வியுடன் புலிக்கூட்டமைப்பில் பங்காளியாக செயற்பட்ட திரு டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பியினர் வெளியேறியமையைத் தொடர்ந்து பழம்பெரும் அரசியல்வாதியென தமக்குத் தாமே பட்டம் சூட்டிக்கொண்ட திரு ஆனந்தசங்கரி அவர்கள் புலிக்கூட்டமைப்பின் புதிய உறுப்பினராக இணைத்துகொண்டார். நடந்த முடிந்த உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் வெளியேயிருந்து தமது ஆலோசனைகளையும், ஆதரவையும் வழங்கிய ஆனந்தசங்கரி அவர்கள் மாகாண சபைக்கான தேர்தலில் தம்மையும் இணைத்துக்கொண்டார்.
இந்நிலையில் அவர்களால் திருமலைக் கச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட மாகாண சபையின் வேட்பாளர்களுக்கான வேட்பு மனுக்கள் உரிய முறையில் பூர்த்திசெய்யப்படவில்லை என்னும் காரணத்தால் அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதனை எதிர்த்து அப்பீல் நீதிமன்றத்தில் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினர் ((DPLF),தாக்கல் செய்த வழக்கில் கிழக்க மாகாண சபைக்கான தேர்தலை பின்போடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
காலங்காலமாக வடமாகாணத்தினை ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகவும் அங்கு வாழும் தமிழ் மக்களின் பெரும்பாலான குடியிருப்புப் பிரதேசங்கள் பாதுகாப்பு வலயம் என்னும் பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை காலமும் முதலைக்கண்ணீர் வடித்த முகமூடியணிந்த புலிக்கூட்டமும் அதன் புலம்பெயர் புல்லுருவிகளும் இன்று யாழ்ப்பாணத்தைப்பற்றி பேசுவதில் மெளனிகளாகிவிட்டனர். மாறாக இன்று அனைவரினதும் முதலைக்கண்ணீர் கிழக்கு வாழ் மக்களுக்காகவே சொரிகின்றது. நனைகின்ற ஆடுகளுக்காக நயவஞ்சகக் கண்ணீர்விடும் இந்த ஓநாய்களுக்கு நாளை இடம்பெறும் தேர்தல் நல்லதொரு பாடத்தினை கற்பிக்குமென நாம் நம்புகின்றோம்.