ரஷ்யாவின் பிரதமராக முன்னாள ஜனாதிபதியான புடின் பதவியேற்பு

ரஷ்யாவின் பிரதமராக,விளாடிமிர் புடின், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ரஷ்ய அதிபராக இருந்த, புடினின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, புடினின் ஆதரவாளர் மெட்வதேவ், அடுத்த அதிபராக தேர்வானார். நேற்று முன்தினம் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். ரஷ்யா தொடர்ந்து, தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது புடினின் விருப்பம். இதற்கு ஏற்றவாறு, பிரதமர் பதவிக்கு அவரது பெயரை, அதிபர் மெட்வதேவ் முன்மொழிந்தார். பாராளுமன்றத்தின் கீழ் சபையான, "துமா'வில் நடந்த வாக்கெடுப்பில், 392 பேர், புடினுக்கு ஆதரவாக வாக்களித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 56 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதையடுத்து, ரஷ்ய பிரதமராக புடின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பண வீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று தனது உரையின் போது அவர் குறிப்பிட்டார்.