பேரியல் அ\ரப் அவர்களை இலக்குவைத்து புலிப்பயங்கரவாதிகள் அம்பாறையில் குண்டுத் தாக்குதல்

Ferial_Ashrof.gifஅம்பாறையில் சற்று நேரத்துக்கு முன்னர் புலிப்பயங்கரவாதிகளால் பேரியல் அ\ரப் அவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்கதலில் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார் அதேவேளை 8 பேர் பலியானதுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

அம்பாறை நகரில் உள்ள ‘நியூ சிட்டி கபே’ எனும் ஹோட்டலுக்கு அருகாமையில் இன்று மாலை 5.45 மணியளவில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குண்டு வெடிப்பில் 8 பேர் இறந்துள்ளனர் என்றும் காயமடைந்த 30 பேர் அம்பாறை ஆஸ்பத்திரியில் இது வரை அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் அமைச்சர் பேரியல் அஷ்ரப் அவர்களை இலக்கு வைத்தே இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் எனினும் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும அறிவிக்கப்பட்டுள்ளது. எற்கனவே 2000 அக்டோபர் 16 ந் திகதி அவரது கணவரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸதாபகருமான ஜனாப் எம்.எச்.எம் அ\ரப் அவர்கள் பயணஞ்செய்த வானூர்தியில் சர்வதேசப் பயங்கரவாதிகளான பிரபாகரன் தலைமையிலான புலிக் கொலைஞர்கள் குண்டுவைத்து அவரைக் கொலைசெய்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இன்றைய தலைவராக செயற்படும் ரவூப் ஹக்கீம் என்னும் துரோகி புலிப்பயங்கரவாதிகளுடன் உடன்படிக்கை ஒன்றினை ஏற்படுத்திக்கொண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. கிழக்கிலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் நாளை இடம்பெறும் தேர்தலில் தேசத்துரோகியான ரவூப் ஹக்கீமை தோற்கடித்து கிழக்கு மாகாணத்திலிருந்து நிரந்தரமாக துரத்தியடிக்கத் தவறின் கிழக்குவாழ் முஸ்லிம் மக்களின் எதிர்காலம் இருள்சூழ்ந்ததாக அமையுமென்பதனை இச்சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்ட விரும்புகின்றோம்.

பேரியல் அஸ்ரப் அவர்களை படுகொலைசெய்வதற்கான குண்டுதாரியை அம்பாறைக்கு அனுப்பிவிட்டு தனது மனைவியை திருகோணமலையில் வாக்குவேட்டை கேட்டு வீடுவீடாக செல்வதற்கு ஹக்கீம் ஒழுங்கு செய்துள்ளார்.ஹக்கீமின் அரசியல் வரலாற்றில் அவரது மனைவியை வாக்குவேட்டையில ஈடுபடுத்தியது இதுவே முதல் தடவையாகும்.்