லஞ்சம் கொடுத்து வாக்குகளைப் பெறும் முயற்சியில் ரவூப் ஹக்கீமின் மனைவியார்

கொழும்பில் வாழ்ந்துகொண்டு மேற்குலக கலாச்சாரத்தில் மூழ்கியிருக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் துணைவியார் வாக்கு வேட்டைக்காக தமது வழமையான வடிவத்தினை மாற்றிக் கொண்டுள்ளார். மொக்காடு என்பது அவருக்கு தெரிந்திராத விடயமாக இருந்தபோதும் மக்களை ஏமாற்றுவதற்காக அந்த வேடத்தினை அவர் தமதாக்கிக் கொண்டுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் மக்களைச் சந்திப்பதாகக்கூறிக் கொண்டு வாக்கு வேட்டையில் ஈடுபட்டிருக்கும் திருமதி ஹக்கீம் அவர்கள் தமது உதவியாளரூடாக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது நிரூபணமாகியுள்ளது. கண்டியில் பிறந்து கொழும்பு நகர கலாச்சாரத்திற்கு அடிமையாகியுள்ள அவர் இயல்பாகவே தமது கையில் ஆங்கில நாவல்களுடன் வலம் வருவது அனைவரும் அறிந்ந விடயமே. இந்நிலையில் திருகோணமலை மாவட்ட மண்ணிற்கு காலடி எடுத்து வைத்திருக்கும் அவர் மக்களின் நலன்கருதிய நோக்கில் வருகைதந்துள்ளாரா அன்றி வாக்குவேட்டைக்காக வருகை தந்துள்ளாரா?

அவரது உதவியாளரின் கைகள் பரிமாறிக்கொண்டிருப்பபது பணமா அன்றி பாசமான உணர்வா? புலிப்பயங்கரவாதிகளுடன் கூட்டுறவினை பேணுவதன்மூலம் தமது பதவியினையும், உயிரினையும் பாதுகாத்துக் கொள்வதற்காக அப்பாவி மக்களை நிரந்தரமாக பயங்கரவாதிகளிடம் அடகு வைப்பதற்கான அரசியலையே அவர்கள் முன்னெடுக்கின்றார்கள். தேசத் துரோககளான ரணில் விக்கிரமசிங்காவும்், ரவூப் ஹக்கீமும் இணைந்து கிழக்கு மக்களை புலிப்பயங்கரவாதிகளிடம நிரந்தர அடிமைகளாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் வெளிப்பாடே ரணில் --ஹக்கீம்் கூட்டுறவாகும் ்எனவே இன்று இடம்பெறவிருக்கும் மாகாண சபைக்கான தேர்தலில் மக்கள் ரவூப் ஹக்கீம் அவர்களை தோற்கடிப்பதன்மூலம் புலியின் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான நிரந்தரத் தீர்வினையும் எடடமுடியுமென்பதனை தெரிவிக்க விரும்புகின்றோம்.