மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருணா மீது வழக்கு தொடர போதிய ஆதாரம் இல்லை என பிரித்தானிய அரசு தரப்பு கூறியுள்ளது

சுறாவைப் பிடிக்க வக்கற்ற சர்வதேச மன்னிப்புச் சபை இறாலைப் பிடிக்க முயற்சி சர்வதேச மன்னிப்புச் சபை என்னும் பெயரில் இயங்கும் மேற்குலக நாடுகளின் எடுபிடிகள் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் இடம்பெறும் மனித உரிமைமீறல்களை கண்டுகொள்வதில்லையா? அன்றி மேற்குலகம் வழங்கும் உதவித் தொகையினைப் பெறுவதற்காக அவைகளை தெரிவிப்பதற்கு தயங்குகின்றனரா? மேற்குலக நாடுகள் அனைத்தும் அண்ணல் காந்தி அவர்களினதும், நெல்சன் மண்டேலா போன்றோரினதும் கொள்கைகளை கடைப்பிடிக்கும் உத்தமர்களாக சித்தரிப்பதற்கு மேற்படி அமைப்பினர் முயல்வதேன்?

சர்வதேசப் பயங்கரவாதியான பிரபாகரனும் அவனது கொலை இயந்திரங்களாக பணியாற்றிய பலரும் பிரித்தானியாவிலும் ஏனைய மேற்குலக நாடுகளிலும் வதிவிட உரிமையும், குடியுரிமையும் பெற்று வழமான வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ள நிலையில் அவர்களையெல்லாம் மேற்கலக மேதைகளென அங்கீகரித்தமையால் அவர்களுக்கெதிரான கொலைக் குற்றங்கள்பற்றி ஆய்வுசெய்வதற்கு இவர்களுக்கு நேரமில்லையா? கடந்த 2002 முதல் 2004 ம் ஆண்டுவரை ரணில் விக்கிரமசிங்காவின் தலைமையிலான அரசாங்க ஆட்சியின்போதும் அதன்பின்னர் 2006 ம் ஆண்டு இன்றைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் அரசாங்கத்தினரால் பயங்கரவாதிகளுடன் ஜெனிவாவில் இடம்பெற்ற பேச்சவார்த்தைவரை வன்னியைத் தலைமையாகக்கொண்ட எத்தனையோ கொலைக்குற்றவாளிகளான பயங்கரவாதிகள் சுதந்திரமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலாவந்தபோதெல்லாம் கண்களை மூடிக்கொண்டு குருடர்களாக செயற்பட்ட சர்வதேச மன்னிப்புச்சபையும் அதன் ஆதரவு இதர அமைப்பக்களும் எங்கு சென்றிருந்தன.

பிரபாகரன் என்னும் சர்வதேசப் பயங்கரவாதியால் கருணாவைக் கொல்பவர்களுக்கு 25 மில்லியன் இலங்கை ரூபா சன்மானமாக வழங்கப்படுமென பகிரங்கமாக புலிப்பயங்கரவாதிகள் அறிக்கைகள் வெளியிட்டமையை மன்னிப்பச் சபை அறிந்துகொள்ளாதிருந்ததன் மர்மமென்ன? பயங்கரவாதிகளிடமிருந்து தனது உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மனிதாபிமானத்தின் மகான்களால் ஆட்சி நடாத்தப்படும் நாடென கூறப்படும் பிரித்தானியாவில் அடைக்கலம் தேடியவருக்கு வழங்கப்படும் பரிசுதான் கொலைக்குற்றச்சாட்டா? பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்று குவித்துவிட்டு பங்கருக்குள் ஒழிந்திருக்கும் பயங்கரவாதியை கைதுசெய்ய வக்கற்ற மேற்குலகம் பாதுகாப்புத் தேடி அபயமடைந்தவன்மீது கொலைக்குற்றம் சுமத்த முற்படுகின்றது. இதுவிடயங்களின்மூலம் மேற்படி மன்னிப்புச் சபையினருக்கு புலிகள் ஏதேனும் பிரதி உபகாரங்கள் வழங்கினார்களா என எமக்கு எண்ணத் தோன்றுகின்றது.

கருணா மீது மேலதிக வழக்குகளை தொடருவதற்கான போதிய ஆதாரங்கள் கிடையாது என்று பிரித்தானிய அரச வழக்கு தொடுப்பு சேவை கூறியுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா என்ற வினாயகமூர்த்தி முரளீதரன் பிரிட்டனில் அடையாள ஆவணங்கள் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டு ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அதில் ஒரு பகுதிக் காலத்தை கழித்த நிலையில் கடந்த வியாழனன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரை குடிபுகல் துறை தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இந்த நிலையில் அவர் இலங்கையில் போர்க்குற்றங்கள் இழைத்தார் மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளை எழுப்பிய மனித உரிமை அமைப்புகள் அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியிருந்தன.

ஆனால் பிரிட்டனின் அரசு வழக்கு தொடுப்பு துறையான கிரவுன் பிராசிக்யூஷன் சர்வீஸ்இ கருணா மீது மேலும் எந்த ஒரு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும்இ வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கித் தருமளவுக்கு யதார்த்த ரீதியான வாய்ப்புகளைத் தரும் ஆதாரம் போதிய அளவில் இல்லை என்று லண்டன் பெருநகர காவல் துறைக்கு அறிவுறுத்தியிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

எனவே இந்த நிலையில் கருணா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் சாத்தியக்கூறு அதிகமாகியிருக்கிறது. பிரிட்டிஷ் அரசின் இந்த முடிவு குறித்து மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்பச் சபை ஏமாற்றம் தெரிவித்திருக்கிறது. இன்று அது வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் சித்ரவதை செய்தது பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்தது சிறார்களை படையில் சேர்த்தது சிறார்களை போரில் பயன்படுத்தியது உள்ளிட்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு உடனடியான முழுமையான பக்கச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான விசாரணையை சர்வதேச சட்டப்படி பிரிட்டன் நடத்தவேண்டும் என்று கூறியிருக்கிறது.