கிழக்கு மாகாணசபைத் தேர்தலும் பயங்கரவாதிகளின் கூட்டமைப்பான ஐ.தே.கட்சி மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினரும்.


கிழக்கு மாகாணசபைத் தேர்தலும் பயங்கரவாதிகளின் கூட்டமைப்பான ஐ.தே.கட்சி மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினரும்.

திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையிலான பாதுகாப்புப்படையினரதும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளினதும் அயராத போராட்டத்தின்மூலம் சர்வதேசப் பயங்கரவாதிகளான பிரபாகரன் தலைமையிலான பாஸிஸப்புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் கடந்த 2006 இறுதியில் விடுவிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியினரால் பயங்கரவாதிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்ட கிழக்கு மாகாண மண்ணில் காலடிபதிக்கமுடியாதிருந்த தேசத்துரோகிகளான ஐக்கிய தேசியக் கட்சியினர் ராஜபக்ஸாவால் விடுவிக்கப்பட்ட அம்மாகாணத்தை மீண்டும் பாஸிஸப் புலிகளிடம் ஒப்படைப்பதாக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கமைய பிரபாகரனின் பொதிசுமக்கும் கோவேறு களுதைகளான தமிழ் பாஸிஸக் கூட்டமைப்பினரும் இணைந்து ஐ.தே.கட்சியின் சின்னத்தில் மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கான முதன்மை வேட்பாளராக களமிறங்கியுள்ள ரவூப் ஹக்கீமை வெற்றிபெறச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டபோதும் தேசியத் துரோகிகளின் தேச விரோத நடவடிக்கைகள் வெற்றிபெறுவதற்கு கிழக்கு மக்கள் துணைபோகவில்லை.

கடந்த 2004 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது வடமாகாணத்தில் மாற்றுக் கட்சியினர் எவரையும் தேர்தலில் பங்கு கொள்வதற்கு அனுமதிவழங்காத புலிப்பயங்கரவாதிகள் 644.279 வாக்காளர்களை உள்ளடக்கியதாகக் கூறப்படும் யாழ் மாவட்டத்தில் ஆக மொத்தம் 257.320 வாக்குகளை மட்டுமே பெற்றனர். இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் சுதந்திரமாக தமது தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்கான சகல வாய்ப்பு, வசதிகளையும் வழங்கிய கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் 308.896 வாக்ககுளைப் பெற்று வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தமது வாக்குகளை வழங்கிய மூவின மக்களுக்கும் விழிப்பு இணையத்தளம் தனது நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதுடன் தொடர்ந்து ராஜபக்ஸாவின் அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரவாதிகளை (பிரபாகரன் தலைமையிலான) அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைக்கு எம் அனைவரினதும் பூரண ஆதரவினை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். எத்தனை தேர்தல்கள் இடம்பெற்றாலும் நமது நாட்டுமக்கள் சுதந்திரமாகவும், சுபீட்சமாகவும், சகோதர உணர்வுடனும் வாழ்வதற்கு பயங்கரவாதிகளை முற்று முழுதாக அழித்தொழிப்பதன்மூலம் மட்டுமே நாம் நிரந்தர சமாதானத்தினை எட்டமுடியுமென்பதனையும் இச்சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்ட விரும்புகின்றோம்.

1 United People`s Freedom Alliance UPFA 308886 52.21 20

2 United National Party UNP 250732 42.38 15

3 People`s Liberation Front JVP 9390 1.59 1

4 Tamizh Democratic National Alliance TDNA 7714 1.30 1