நடந்து முடிந்த கிழக்குமாகாண சபைக்கான தேர்தலில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களின் விபரம்

ஐக்கிய மக்கள் சதந்திர முன்னணியினரின் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குககைப் பெற்றவராக பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் 41.936 வாக்குகளைப்பெற்று முன்னிலையிலுள்ளார். எஸ்.ஜே.எஸ் முகமட் என்பவர் 36.419 வாக்குகளையும் ஹிஸ்புல்லா என்பவர் 35.949 வாக்குளையும் பெற்றுள்ளனர். இதனடிப்படையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பெறுவதற்கான வாய்ப்புக்கள் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்பவருக்கே இருப்பதாக தெரியவருகின்றது