கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தாங்கள் எற்கப்போவதில்லை என புலியீன் தரகர்களான ஐ.தே.கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார். தேர்தலை ஏற்பதற்கோ அன்றி நிராகரிப்பதற்கோ அத்தநாயக்க தேர்தல் ஆணையாளரருமல்ல உயர் நீதிமன்ற நீதிபதியுமல்ல புலிப்பயங்கரவாதிகளிடம் மீண்டும் கிழக்கை தாரைவார்ப்பதற்கு ஐ.தே.கட்சியினர் மேற்கொண்ட இரகசிய உடன்படிக்கையே தோல்விக்கு காரணமென்பதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்தும் தேசத் துரோக நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்வது நாட்டுற்கும், மக்களுக்கும் நன்மைபயக்கும் என்பதனை ஐ.தே.கட்சியினர் உணர்ந்துகொள்வது பொருத்தமானதாகும்.
ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கிழக்கு மாகாணசபை தேர்தல் முடிவுகளை தாங்கள் ஏற்க போவதில்லை என தெரிவித்துள்ளார். இதேவேளை பாராளுமன்றத்தை அவரசமாக கூட்டுமாறும் சபாநாயகருக்கு அவர் வேண்டுகோள் விடுக்கப்போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.