மியான்மர் நாட்டை, கடந்த 2-ந் திகதி இரவு நர்கீஸ் என்ற பயங்கர புயல் தாக்கியது. இதில் ஐராவதி டெல்டா பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதியில் ஐக்கிய நாட்டு சபையின் சமூக சேவை அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் படி, இறந்தவர்களின் எண்ணிக்கை 63,290-ல் இருந்து 1,01,682 வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. மேலும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் 2,20,000 வரை இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டு இருக்கிறது.
ஐக்கிய நாட்டு சபையின் சமூக சேவை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேற்கத்திய நாடுகளின் சமூக சேவகர்களை, மியான்மரின் ராணுவ ஆட்சி, சேதம் அடைந்த பகுதிகளுக்கு சென்று உதவிகள் செய்ய, அனுமதி மறுக்கிறது. ஏராளமானவர்கள் பாங்காக்கில் காத்திருக்கிறார்கள்'' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.