கிழக்கு மாகாண மக்கள் ஐக்கியமாக வாழ்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய இயக்கங்களும், தமிழ் பாஸிஸக் கூட்டமைப்பு, பாஸிஸப் புலிகள் போன்றோரது கோரிக்கைகளும் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண மக்கள் முஸ்லிம் காங்கிரஸினருடைய இனவாத, சந்தர்ப்பவாத போக்குகளை இனங்கண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு தகுந்த பாடம் கற்பித்துள்ளனர். இனரீதியிலான அணுகுமுறைகளைக் கொண்ட தமிழ் இயக்கங்கள், தமிழ் பாஸிஸக் கூட்டமைப்பு, சிறீலங்கா முஸ்லிம் காங்கரஸ் போன்றவை கடும் தோல்வியை இத்தேர்தலில் சந்தித்துள்ளன. கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களிடையே அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக ராணுவரீதியில் மேலோங்கியிருந்த பிரபாகரன் குழு கிழக்கில் வலுவிழந்திரப்பதைப்போல, அரசியல்ரீதியிலும் கிழக்கு மக்களிடத்தில் வலுமிக்க அமைப்புகளாக காணப்பட்ட தமிழ் பாஸிஸக் கூட்டமைப்பும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினரும் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளன. சுமார் 40 வருடகால வரலாறுகொண்ட சம்பந்தன்போன்ற சந்தர்ப்பவாதிகளால் வழிநடாத்தப்படும் தமிழரசுக் கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியினரை ஆதரிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளினை மக்கள் உதாசீனம் செய்துள்ளார்கள்.

பாரம்பரிய கட்சிகளை நிராகரித்து இனங்களிடையே ஐக்கியப்பட்ட, சங்கமமாகிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 52.21 சதவீத வாக்குகளைப் பெறுவதற்கு இதுவே காரணமாகும். பாரம்பரிய தமிழ் அரசியல் கட்சிகளது மட்டுமல்ல முஸ்லிம் காங்கிரஸினருடைய எதிர்காலமும் இதன்மூலம் பலத்த கேள்விக்குரியதாகியுள்ளது. கடந்த காலங்களில் இனவாத அணி திரட்டல்களின் காரணமாக தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட இழப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெறக்கூடாதென்பதில் மக்கள் அவதானமாக இருப்பதனை அறியக்கூடியதாக இருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸினருடைய தலைவர் ஹக்கீம் முஸ்லிம் முதலமைச்சர் என்னும் கோரிக்கையுடன் தேர்தலில் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டார். ஆனால் முஸ்லிம் மக்கள் முஸ்லிமா, தமிழரா முதலமைச்சர் என்பதனைவிட ஒரு கிழக்கு மாகாணத்தவர் முதலமைச்சராக வரவேண்டுமென்கினற தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா அவர்களின் வேண்டுகோளுக்கு மக்கள் அதிகம் மதிப்பளித்துள்ளார்கள்.

பாரம்பரிய முஸ்லிம் காங்கிரஸினருடைய வாக்கு வங்கி சிதைவடைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர மன்னணியினருக்குப் பின்னால் அணிதிரண்டிருக்கக்கூடிய அமீர் அலி, ஹிஸ்புல்லா, பேரியல் அ\ரப், அதாவுல்லா போன்றோரின் பின்னால் புதிய வாக்குவங்கி ஒன்று உருவாகி வருகின்றது. இதேபோன்றுதான் கிழக்கு மாகாணத்தினை அடிப்படையாகக் கொண்டு தமிழீழக் கோரிக்கையையும், வடகிழக்கு இணைந்த தாயகமென்கின்ற அர்த்தமற்ற வாய்ச் சவடால்களையும் கடந்து மக்களது உண்மையான பிரச்சினைகளை முன்னிறுத்தி உருவாகிய ரீ.எம்.வி.பி பலத்த ஆதரவினைப் பெற்று வெற்றியீட்டியள்ளது. கிழக்கு மாகாணத் தோதலில் பங்கெடுத்த 1342 வேட்பாளர்களிடையே மிகக்கூடிய விருப்ப வாக்ககளைப் பெற்றவராக கிழக்க மாகாண மக்களால் முன்னிறுத்தப்பட்டிருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவர் 41.936 வாக்ககளைப் பெற்றிருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தன் திகழ்கின்றார்.

பலபத்துவருட அரசியல் அனுபவங்களையும் இலங்கை அரசியலில் அசைக்கமுடியாத தலைவர்களாக கடந்த காலங்களில் இருந்துவந்த ரணில் விக்கிரமசிங்கா, ரவூப் ஹக்கீம் போன்றோரது அரசியல் அனுபவங்களும் தேர்தல் வியூகங்களும் பிள்ளையானிடம் தோல்விகண்டிருக்கின்றன. நான்கு வருட அரசியல் வயதினை மட்டுமேகொண்ட ரீ.எம..வி.பியானது முதிர்ச்சிபெற்ற தலைவர்களையும் அமைச்சர்களாக இருந்தவர்களையும் வென்று இன்று கிழக்குமாகாண முதலமைச்சராக வருகின்ற வாய்ப்பினை கைப்பற்றி இருப்பதென்பது மாபெரும் சாதனையாகும்.. எது எப்படியிருந்தபோதிலும் இன வேறுபாடுகளைக் கடந்த புதியதோர் அரசியல் அணுகுமுறையினை மக்கள் இன்று விரும்புவதன் காரணமாகவே தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒருமிப்பில் உருவாகிய ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பினருக்கு 20 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றது.. எதிர்காலத்தில் கிழக்கில் அமைதிக்கும், சுபீட்சமான வாழ்விற்கும் அமையவிருக்கின்ற கிழக்கு மாகாண சபையில் பல்லின மக்களின் கூட்டாட்சி வழிவகுக்குமென நம்பலாம்.