புலி ஆதரவு தமிழக அரசியல் கட்சிகளை தடைசெய்யுமாறு தமிழக முதல்வரிடம் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தல்

TigerNedumaran_0.jpgதிரு கருணாநிதி அவர்களை முதலமைச்சராகக்கொண்ட தமிழக அரசின் பங்காளிகளான காங்கிரஸ் கட்சியினர் பயங்கரவாதிகளான புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் தமிழக அரசியல் கட்சிகளை இரும்புக் கரம்கொண்டு தடைசெய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். பயங்கரவாதம் எக்கோணத்தில் எங்கிருந்து வந்தாலும் அதனை இரும்புக் கரங்களைக் கொண்டு கையாளுமாறு முதிர்ந்த காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவரான டி.சுதர்சனம் என்பவர் தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் எதனது பெயரையும் குறிப்பிடாத அவர் பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தடைசெய்யுமாறு வலியுறத்தியுள்ளார். அத்துடன் புலிகள்மீதான தடையை தொடர்ந்தும் நீடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

1992 ம் ஆண்டு முதல் தடவையாக தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பு மீண்டும் 2004 ம் ஆண்டு மே மாதம் 14 ந் திகதி ( under the Unlawful Activities (Prevention) Act, 1967 )சட்டமூலத்திற்கமைய தடைசெய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.