சீனாவில் பாரிய நில நடுக்கம்: 9.000க்கும் மேற்பட்டோர் பலி

சீனாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 9.000 பேர் இறந்தனர். நில நடுக்கத்தின் தாக்கம் பல ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள நகரங்களிலும் காணப்பட்டது. சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது சிசூவான் மாகாணம். இதன் தலைநகரான செங்டூவில் இருந்து 146 கி.மீ. தொலைவில் உள்ளது வெங்சூவான் பகுதி. இந்திய நேரப்படி காலை 11.58 மணிக்கு இப்பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.