
கிழக்கில் 17 ஆவது தோல்வியைச் சந்தித்தார் ரணில் முன்னைநாள ஐ.தே.கட்சியின முக்கியர்தர்்்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுடன் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 17 ஆவது தடவையாகவும் தோல்வியைத் தழுவியுள்ளதாக நிர்மாண, பொறியியல் சேவைகள் அமைச்சர் ரஜித சேனாரத்ன தெரிவித்தார்.கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றி குறித்து கருத்துத் தெரிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று காலை மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் கூறியதாவது:
தெற்கில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதுபோன்று கிழக்குத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றுபெற்று அரசாங்கத்தைக் கைப்பற்றுவோம் என அக்கட்சி அங்கத்தவர்கள் குரல் எழுப்பினார்கள். ஆனால், மக்கள் தீர்ப்பு வேறுவிதமாக அமைந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 1997 ஆம் ஆண்டிலிருந்தே வெளிநாட்டு வெள்ளையர்களின் உதவியினாலேயே தேர்தலை வெற்றிகொள்ளப் பார்க்கிறார். சர்வதேசத்துக்கு அறிக்கைகளை விடுவதும் சர்வதேசப் பிரதிநிதிகளைச் சந்திப்பதும் தான் கட்சித் தலைவரின் பணியாக இருந்தது. கிராமங்களிலுள்ள மக்களுடன் எந்தத் தொடர்பும் கட்சித் தலைவருக்கு இருக்கவில்லை. இதனாலேயே அவர் இத்தகைய தோல்விகளுக்கு முகம்கொடுக்கின்றார்.
தேர்தல் பிரச்சாரங்களின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புலிகளிடம் பாதுகாப்பு உத்தரவாதம் பெற்றதுபோன்று ஈடுபட்டனர். ஆனால், அரசாங்க அமைச்சர்கள் பெரும் பாதுகாப்புக்கு மத்திலேயே நடமாடவேண்டியிருந்தனர். இந்தத் தேர்தலைக் குழப்ப புலிகள் எடுத்த முயற்சிகள் கூட பலனளிக்க வில்லை என்பதனைத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.