நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலினூடாக ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பினர் 20 ஆசனங்களைக் கைப்பற்றி ஆளும் கட்சியாக வந்திருந்தபோதிலும் முதலமைச்சர் தெரிவிற்கான வாய்ப்புகள் தமிழ் பிரதிநிதிகளுக்கு கிடைப்பது கேள்விக்குறியாகி நிற்கின்றது. இதற்குக் காரணம் ஐ.ம.சு கூட்டமைப்பிற்குள் இணைந்து போட்டியிட்ட முஸ்லிம் மக்கள் சார்பிலான வேட்பாளர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சார்பான வேட்பாளர்களைவிட ஒரு ஆசனத்தினை கூடுதலாக பெற்றிருப்பதே ஆகும். இந்நிலையில் மூன்றாவது அணிகளாகப் போட்டியிட்ட தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணியினர் ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் சனத்தொகை பரம்பல்பற்றிய கரிசனையின்றி தனித்து இக்கூட்டணியினர் போட்டியிட்டதன் காரணமாக தமிழர் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று ஒரு ஆசனத்தினைக்கூட பெற்றக்கொள்ள முடியாத நிலையிலும் ஈ.பி.டி.பி மற்றும் ஈரோஸ் போன்ற அமைப்புக்கள் சமூகப் பொறுப்பற்ற விதத்தில் தேர்தல் களத்தில் இறங்கியதனால் முறையே 5.418 வாக்குகளும் 2.275 வாக்குகளும் இச்சிறு கட்சிகளால் வீணடிக்கப்பட்டிருக்கின்றன.
இவை அனைத்து வாக்குகளும் ரீ.எம்.வி.பியின் வேட்பாளருக்கு வழங்கப்பட்டிருப்பின் இன்று கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக தமிழ் பிரதிநிதி ஒருவர் வருவதற்கான தடைகள் எதுவும் இருந்திருக்காது. இதேபோன்று ரீ.எம்.வி.பியின் வேட்பாளர்களுக்கு இடப்பட்ட வாக்குகள் வெற்றிலைச் சின்னத்திற்கு வழங்கப்பட்ட மொத்த வாக்குகளில் கூடிய பங்கினை வகிக்கின்ற்து. ஆனாலும் அதற்குரிய பிரதிநிதித்துவங்கள் தெரிவுசெய்யப்படாது போனமை விகிதாசார வாக்களிப்பு முறையில் ரீ.எம்.வி.பி.யினரோ தமிழ்மக்களோ போதிய அனுபவம் பெற்றிருக்கவில்லை. இதற்கான காரணம் கடந்த 20 வருடகாலமாக ஜனநாயக பாதைகளில் அம்மக்களை பங்களிக்கவிடாது தடுத்தமையினால் அதிலிருந்து அவர்கள் தூரவிலகிச் சென்றமையாகும். கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களிலும், உள்ளராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களிலும் பெற்றிருக்கின்ற அனுபவத்தினூடாக எதிர்காலத்தில் கிழக்கு மாகாண மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில் களமிறங்குகின்ற சிறு, சிறு கட்சிகளை மக்கள் நிராகரிக்கவேண்டும்.இல்லாதவிடத்து கிழக்க மாகாணத்தில் தமிழ் மக்களுக்கான பிரதிநிதித்துவங்கள் சின்னாபின்னப் படுத்தப்பட்டு போவது நிட்சயம்.
இக்கட்டுரை கிழக்கு மாகாணத்தில் இன்றுள்ள நிலையில் தமிழ்மக்களின் கைகளில் ஆட்சி அதிகாரங்கள் அமையவேண்டுமென்பதனையிட்டு எழுதப்படுகின்றதேயன்றி முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் வரக்கூடாதென்பதோ, முஸ்லிம் பிரதிநிதிகள் ஆட்சி அதிகாரங்களில் அமரக்கூடாதென்பதோ எமது நோக்கமல்ல ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக யுத்தத்தினால் பலவழிகளிலும் அழிக்கப்பட்டு பல்லாயிரம் இளம் சந்ததியினரின் உயிர்களைப் பலிகொடுத்த ஒரு சமூகத்தின் ஆதங்கத்திலிருந்து எழுதுவதாகும். இதனைப் புரிந்துகொள்ளக்கூடிய பல்லாயிரம் சகோதர இன மக்கள் இருக்கின்றார்கள் என்பது எமக்கு இன்னும் நம்பிக்கை தரும் செய்தியாக இருக்கின்றது. ஆனாலும் சில அரசியல் தலைமைகள் தமது பதவிகளுக்காகவும், சுய நலன்களுக்காகவும் தமிழ் பிரதிநிதிகளிடம் முதலமைச்சருக்கான வாய்ப்பு வழங்கப்படுவதை தடுக்க முயன்று வருகின்றனர்.. இன்றையநிலையில் மாகாணசபையின் அதிகாரங்கள் எந்த சமூகத்திற்கு அவசியமாயிருக்கின்றது, யார் அதனைக் கைப்பற்றவதனூடாக அதிககாரம்கூடிய ஒரு சபையாக அதனை வழர்த்தெடுக்கும் வாய்ப்பினைக் கொண்டவாகள் என்பதனை இந்த சந்தாப்பவாத தலைமைகள் பரிந்துகொள்ள மறுக்கின்றன.
தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் இன்றைய யதார்த்தநிலையினைப் பரிந்துகொள்ளக்கூடிய ஒருவர் முதலமைச்சரானால் அது தமிழரோ, முஸ்லிமோ என்பது பிரச்சினைக்குரிய ஒன்றாக இருக்கமாட்டாது. துரதிஸ்டவசமாக இன்றிருக்கின்ற ஹிஸ்புல்லா போன்ற தலைமைகள் அவ்வாறு சிந்திக்கத் தவறுவதன் காரணமாகவே இன்றைய இழுபறி நிலை எற்பட்டிருக்கின்றது என்பதனை வாக்காளர்களில் ஒருவரான நான் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
தயவுசெய்து எனது கட்டுரையினை உங்களின் விழிப்பு இணையத்தளத்தில் பிரசுரிக்குமாறு வேண்டுகின்றேன்.
தர்மசீலன் செங்கலடி