இலங்கையில் வாழும் பெரும்பான்மை இனமான சிங்களமக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியினரும், சிறீலங்கா சுதந்திரக்கட்சியினரும் சிறுபான்மை இனமக்களின் அரசியல் உரிமைகளை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு உரியதுபோன்று சமத்துவமான முறையில் பகிர்ந்தளிப்பதற்கு தவறியதன் காரணமாக இனங்களுக்கிடையிலான முரண்பாடு உருவானது. அதனை சுமுகமான முறையில் தீர்ப்பதற்கான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதற்கமைய சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்குமிடையில் சில உடன்படிக்கைகள் உருவாக்கப்பட்டபோதும் அவ்வுடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தவிடாது ஐ.தே.கட்சியினர் தடுத்து நிறத்தியமை வரலாற்று உண்மைகளாகும்.
உதாரணமாக பண்டா –செல்வா உடன்படிக்கை, டட்லி –செல்வா உடன்படிக்கை போன்றவை முக்கியமானவையாகும். இந்நிலையில் 1970 ம் ஆண்டு ஆட்சியமைத்த சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் தலைமையிலான _லங்கா சுதந்திரக்கட்சி 1973 ம் ஆண்டு தமிழ் மாணவர்களுக்கான தரப்படுத்தலை அறிமுகப்படுத்தியது. அந்நடைமுறை யாழ் குடாநாட்டில் கல்விகற்ற மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவில் சிறியதோர் தாக்கத்தினை ஏற்படுத்திய அதேவேளை 1974 ம் ஆண்டு இணைக்கப்பட்ட மாவட்டரீதியான இட ஒதுக்கீடு ஏனைய பின்தங்கிய மாவட்டங்களில் கல்விகற்ற தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்களின் எதிர்காலத்தை ஒழிமயமாக்குவதற்கான வழியினையும் ஏற்படுத்தியது. ஆனால் தரப்படுத்தல் முழுமையான தமிழ் மாணவர்களின் கல்வியினை பாதிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டதென வடமாகாண அரசியல்வாதிகளால் பொய்யுரை புனையப்பட்டு தமிழ் மக்கள் மத்தியில்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தரப்படுத்தல் அறிமுகப்படுத்துமுன்னர் கொழும்பு, குருநாகல், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் கல்விகற்ற மாணவர்கள் மட்டுமே பெரும்பாலாக பல்கலைக்கழக நுழைவிற்கான வாய்ப்பினை பெற்றிருந்தனர் காரணம் எனைய மாகாணங்களில் வாழ்ந்த மாணவர்களின் கல்வி வழர்ச்சிபெறுவதற்கான தரமான கல்விக்கூடங்கள் அம்மாகாணங்களில் அமைக்கப்பட்டிருக்கவில்லை அதனால் குறிப்பிட்ட மாவட்டங்களில் வாழ்ந்த மாணவர்களுக்கு மட்டுமே உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தன.இந்நிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட தரப்படுத்தல் நாடு தழுவியரீதியில் நன்மைபயப்பதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மாணவர்களின் கல்வியினை திட்டமிட்டு பறிப்பதற்கான நடவடிக்கைகளை சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டதாக பொய்யுரைகளைப் பரப்பிய வடமாகாண அரசியல்வாதிகள் அதே சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களால் திருகோணமலையில் அமைக்கப்படவிருந்த பல்கலைக்கழகத்தினை சூறையாடிச்சென்று யாழ்ப்பாணத்தில் அமைத்தனர். தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக யாருக்கும் பாதநமஸ்காரம் பண்ணத் தயங்காத வடமாகாண அரசியல்வாதிகள் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தினை ஒருபுறம் விமர்சனம் செய்யும் அதேவேளை மறுபுறம் பின்கதவால் சென்று தமது தேவைகளைப் பெறுவதில் இரட்டைவேடமிட்டனர். மேற்படி தரப்படுத்தல் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதற்கு ஆதரவாக யாழ் மாவட்டத்தில் பதவிவகித்த 03 பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியதுடன் அரசாங்கத்துடனும் இணைந்திருந்தனர்.
5 பயங்கரவாத தடைச்சட்டம்
தரப்படுத்தலின்மூலம் தமிழ் மாணவர்களின் கல்வியில் பாதிப்பினை எற்படுத்தியமையை காரணங்காட்டி குடாநாட்டின் மூலை முடுக்குகளில் வாழ்ந்த பிற்போக்குச் சிந்தனைகொண்ட வேலையற்ற இளைஞர் கூட்டம் ஆளுக்கொரு மூலையில் தமக்கென தனியான ஆயுதக் குழுக்களை உருவாக்கி பணம் பெறுவதற்காக வங்கிக் கொள்ளைகளிலும் அதனை விமர்ச்சிப்பவர்களுக்கெதிராக படுகொலைகளிலும் தமது தேசவிரோதச் செயல்களை செயற்படுத்திய அதேவேளை அவர்களின் வன்முறை நடவடிக்கைகளுக்கு விடுதலைப் போராட்டம் என்னும் வியாக்கியானத்தினையும் முன்வைத்தனர்.
இறுதியில் இன உரிமைப் போராட்டம் அதிகாரபீடத்தினை ஆட்கொள்ளும் வன்முறை நிறைந்த துப்பாக்கிக் கலாச்சாரமாக மாற்றப்பட்டு இன உரிமையினை மீட்பதற்காகப் புறப்பட்ட துப்பாக்கிதாரிகளின் ஆயுதங்கள் சொந்த இனத்தினையே வேட்டையாடும் பணிக்கு பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் ஆயுததாரிகளுக்கு இடையில் முடுக்கிவிடப்பட்ட கொலைக்கலாச்சாரம் காலப்போக்கில் அப்பாவி மக்களை பதம்பார்த்தது இந்நிலையில் இன்று ஏறக்குறைய 70 ஆயிரம் அப்பாவி மக்களின் உயிர்கள் பலிகொள்ளப்பட்டதுடன் 30 ஆயிரம்வரையிலான இளம் தமிழ் தலைமுறையினரும் பலியாக்கப்பட்டுள்ளனர். இன உரிமைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது காங்கேசன்துறை முதல் பாணமை வரை வாழ்ந்த தமிழ்மக்கள் இன்று கனடா முதல் அவுஸ்திரேலியாவரை அகதிகளாக 10 லட்சம் தமிழர்கள் வாழ்வதுடன் அண்டை நாடான இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் 99 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகவும் இலங்கையின் தெற்கில் 7 லட்சம் தமிழர்கள் இடம் பெயர்ந்தும் வாழ்கின்றனர்.
இவைதவிர யாழ் குடாநாடு முற்று முழுதாக ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இன்று ஆட்சி செய்யப்படுகின்றது. களுதை தேய்ந்து கட்டெறும்பாகி அதுவும் தேய்ந்து அடையாளமற்ற நிலையில் மக்களையும், மண்ணையும் இழந்த மாபியாக்களில் பிரபாகரன் தலைமையிலான பாஸிஸ்டுகள் ஒருசாரார் மட்டும் வன்னியில் அமைக்கப்பட்டுள்ள பங்கர்களுக்குள் தமது ஆட்சிபீடத்தினை அமைத்துள்ளநிலையில் கிழக்கு தனக்கான விடுதலையினை மக்களின் விருப்பத்துடன் வென்றுவிட்டது.
அனைத்து தமிழ்மக்களினதும் உரிமைகளை சமமாக பங்கிடுவதற்கான உடன்படிக்கை ஒன்று 1987 ம் ஆண்டு இலங்கை –இந்திய உடன்படிக்கை என்னும் பெயரில் கைச்சாத்திடப்பட்டு இலங்கையில் வாழும் பெரும்பான்மை இனத்தவரான சிங்கள மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் அனுபவிப்பதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்தவிடாது தடுத்த சர்வதேசப் பயங்கரவாதியான பிரபாகரனும் அவனது கைக்கூலிகளும் இன்று வன்னியிலுள்ள பங்கர்களுக்குள் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது.
அன்றைய சனத் தொகை புள்ளிவிபரத்திற்கமைய 850.000 மக்களை உள்ளடக்கிய யாழ் குடாநாட்டிலிருந்து தமிழ் மக்களுக்கான உரிமைப்போராட்ட விடுதலை அமைப்புக்கள் என்னும் பெயரில் உருவாகிய மாபியாக்களின் பெயர்கள் பின்வருமாறு.
LTTE Liberation Tigers of Tamil Eelam (சர்வதேசப்பயங்கரவாதிகள்)
EPRLF Eelam Peoples Liberation Front .
EPDP Eelam Peoples Democratic Party - Pro government group and a political party accused of being a para-military.
TELO Tamil Eelam Liberation Organization .
PLOTE Peoples Liberation Organisation of Tamil Eelam .
EROS Eelam Revolutionary Organization - Part of LTTE.
TLO - Tamil Liberation Orgagnization.(1974-1978)
TSK – Tamilar Suya-Aadchi Kazhakam (1969), of V. Navaratnam; a splinter group of ITAK.
ETOM – Eela Thamilar Ottrumai Munnani (1960), of C.Suntheralingam; a one-person band, which became a minor constituent of the TULF.
DPLF – Democratic People's Liberation Front, the political wing of PLOTE, of D.Siddarthan.
PFLT – People's Front of Liberation Tigers (1989), now defunct political party of the LTTE.
ENLF – Eelam National Liberation Front (1985-1986), a short-lived union of the LTTE, EROS, TELO and EPRLF. LTTE wiggled out of this union.
TELF – Tamil Eelam Liberation Front (1982), of S.C.Chandrahasan, M.K.Eelaventhan, journalist Kovai Mahesan and Dr.S.A. Tharmalingam; a splinter group of the TULF.
ENDLF – Eelam National Democratic Liberation Front (1987),.
ELDF – Eelam Liberation Defence Front.
ELO – Eelam Liberation Organisation (1975).
ELT – Eelam Liberation Tigers.
EM – Eagle Movement, of Gnanavel.
ERCP – Eelam Revolutionary Communist Party.
GATE – Guerrilla Army of Tamil Eelam.
PLFT – People's Liberation Front of Tamil Eelam, a splinter group of NLFTE.
PLA – People's Liberation Army, the military wing of EPRLF, Lead by current EPDP leader Douglas Devananda. Important achievement of the PLA was the 1984 kidnapping of American couple Stanley Allen and his wife, Mary Allen from Columbus, Ohio, in Jaffna.
PLP – People's Liberation Party.
RELO – Revolutionary Eelam Liberation Organisation.
RFTE – Red Front of Tamil Eelamists. (1984) .
TEA – Tamil Eelam Army (1983), of Panagoda Maheswaran.
TEC – Tamil Eelam Commando.
TEDF – Tamil Eelam Defence Front.
TEEF – Tamil Eelam Eagles Front.
TELA – Tamil Eelam Liberation Army (1982) of Oberoi Thevan; a splinter group of TELO. Following the assassination of Thevan in 1983 by the LTTE, TELA was absorbed by PLOTE. .
TELE – Tamil Eelam Liberation Extremists, which Taraki identified as "led by one 'TELE Jegan.' He was shot dead by the LTTE.
TELG – Tamil Eelam Liberation Guerrillas.
TENA – Tamil Eelam National Army (1983), of Amirthalingam Baheerathan.
TERO – Tamil Eelam Revolutionary Organisation, of Sudan Ramesh; a splinter group of TELO.
TERPLA – Tamil Eelam Revolutionary People's Liberation Army, of Thangarasa.
TESS – Tamil Eelam Security Service.
TLO – Tamil Liberation Organisation (1969), the progenitor of TELO.
TNC – Tamil National Council (1989).
TNT – Tamil New Tigers (1972-1976); renamed the LTTE.