பாஸிஸப் புலியின் பாணியில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு பயங்கரவாதிகள் --குமாரதுரை

Rabuf_Hakkim_Prepa_3.jpg யார் இந்த ரவூப் ஹக்கீம்?
பாஸிஸப் புலியின் ஆதரவாளர்களான பயங்கரவாதிகள் எவ்வாறு புலியின் வன்முறை நவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க முன்வராத மாற்றுக் கருத்தாளர்கள்மீது தமது ஊடக வன்முறையினை கட்டவிழ்த்து விடுகின்றார்களோ அதே பாணியில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு பயங்கரவாதிகள் தமது பிரச்சாரங்களை இன்று முன்னெடுக்கின்றனர். அரசியல் அறிவு அறவே அற்றுப்போய் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பயிற்றப்பட்டுவிட்ட இவர்கள் கருத்தைக் கருத்தால் வெல்லமுடியாத காட்டுமிராண்டிகள் என்பதனையும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.அமரர் எம்.எச்.எம் அ\ரப் அவாகளின் தலைமையில் உருவாக்கப்பட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று கட்சியின் ஸ்தாபகரையே படுகொலைசெய்த பாஸிஸப் புலிகளின் பங்காளிகளாக மாறிவிட்டமையை நாம் முதலில் தெரிவிக்க விரும்பகின்றோம்.

பாஸிஸப் புலியின் பங்காளியாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்று (12-04-02) இணைந்ததோ அன்று முதலே அவர்களின் ஆதரவாளர்களில் ஒருசாரார் புலியிடம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான பயிற்சியினையும் பெற ஆரம்பித்தனர்.
(பன்றியுடன்கூடிய கன்றும் மலம் உண்ணும்) என்னும் முதுமொழிக்கமைய புலி எவ்வாறு தனது மாற்றுக்கருத்தாளர்கள்மீது மலம் வீச முற்படுகின்றதோ அதனை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தீவிரவாதிகளும் கையாள முற்பட்டனர்

அதன் விளைவாகவே லண்டனில் சட்டத்தரணியாகவும், மனித உரிமைவாதியாகவும் பணியாற்றும் எஸ்.எம்.எம்.பஸீர் என்பவரால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாறு தொடர்பாகவும் அதன் இன்றைய செயற்பாடுகள் தொடர்பாகவும் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றிற்கு தமது பக்கத்திலுள்ள நியாயத்தன்மையினை வெளிக்காட்ட முடியாத முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு பயங்கரவாதிகள் சிலர் அன்னார்மீது அபாண்டமான பொய்யுரைகளை புனைந்துள்ளனர். கட்சியின் ஸ்தாபகரான அ\ரப் அவர்களுடன் பஸீர் அவர்கள் ஏற்கனவே இணைந்து செயலாற்றியபோது கட்சியில் உயர் பதவியினைப் பெறுவதற்காக முயன்றதாகவும் அதில் அவருக்கு எற்பட்ட தோல்வியின் விளைவாகவே கட்சியினை விமர்சனம் செய்வதுடன் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் செயற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அத்தடன் அவர் பிரித்தானிய அரசாங்கத்தினை ஏமாற்றி doll money (picchai sambalam)பெறுவதுடன் ஆட்கடத்தல்போன்ற மோசடிகளிலும் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். சுயமாகவும், கெளரவமாகவும் தனியானதொரு சட்டத்தரணி அமைப்பினை தனது துணைவியாருடனும் மேலம் சில தொழிலாளர்களை பணிக்கு அமாத்தியும் தொழில் நடாத்திக் கொண்டிருக்கும் ஒரு கெளரவமான பிரஜைமீது இப்பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் பொய்யுரைகளில் தம்மை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் என வெளிக்காட்டியுள்ளதன்மூலம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் பயங்கரவாத அமைப்பு என்பதனை அவர்கள் ஏற்றள்ளார்கள். அத்துடன் இலங்கை ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் பஸீர் அவர்களும் மேலம் 5 பேரும் கடந்த பெப்ருவரி மாதம் இலங்கைக்குச் சென்று இனப்பிரச்சினை தொடர்பான சில கலந்துரையாடல்களை மேற்கொண்டிரந்தனர். அக்கலந்துரையாடலில் 13 வது அரசியல் அமைப்புச் சரத்தினை நடைமுறைப்படுத்துமாறும் காலப்போக்கில் அதனை விரிவு படுத்தவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவதற்கமான வழிவகைகளை கையாளமுடியுமெனவும் பயணத்தில் பங்குகொண்ட அனைவராலும் முன்வைக்கப்பட்டது. இக்குழுவினரை வழிநடாத்துபவராக லண்டனை வசிப்பிடமாகக்கொண்ட திரு ஜெயதேவன் அவர்கள் தலைமை வகித்திருந்தார். இந்நிலையில் இதுவிடயத்தினை தனியாக பஸீர் அவர்கள்மீது பழிசுமத்தும் நோக்குடன் முஸ்லிம்கள்மீது 13 வது சரத்தினை வலுக்கட்டாயமாக திணிப்பதற்கான நடவடிக்கைகளில் பஸீர் அவர்கள் முனைப்புடன் செயற்பட்டதாகவும் அப்பயங்கரவாதிகள் பழிசுமத்தியுள்ளனர்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களில் ஒரு சாரார் பயங்கரவாதிகள் என்பதற்கான ஆதாரமாக அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள (முஸ்லிம் தேசம்) என்னும் தனிநாட்டுக் கோரிக்கையும் சான்றாக அமைந்துள்ளது.. வடகிழக்கு இணைந்த தமிழீழம்தான் தமது லட்சியமென பாஸிஸப் புலிகளான பயங்கரவாதிகள் ஒருபுறமும் அதன் சகோதர பயங்கரவாதிகளான முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் (முஸ்லிம் தேசமென) மறு புறமும் குரல் கொடுப்பது அவர்களின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு மேலம் வலுவூட்டியுள்ளது.

இதன்மூலம் ஜனநாயகத்தில் அதிதீவிர நம்பிக்கை கொண்டு வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காலப்போக்கில் அகில இலங்கைரீதியாக பரந்து வாழும் முஸ்லிம் மக்களின் நலனையும் இணைக்கும் அமைப்பாக மாற்றமடைந்து. அதற்கமைய 2 வருடகால இடைவெளியில் தேசிய ஐக்கிய முன்னணி என்னும் சகோதர அமைப்பு ஒன்றினையும் உருவாக்கிய அ\ரப் அவர்கள் அந்நடவடிக்கையிலும் பாரிய வெற்றியினை அடைந்தார்.

இந்நிலையிலேயே முஸ்லிம் மக்களுக்கென தனியானதொரு அரசியல் கட்சி உருவாவதை அனுமதிக்கக்கூடாது என்பதனை கருத்தில் கொண்ட சர்வதேசப் பயங்கரவாதியான பிரபாகரன் தனது வன்முறையாளர்களை ஏவிவிட்டு அ\ரப் அவர்களை உலங்கு வானூர்தியில் குண்டுவைத்து படுகொலை செய்தான். இதுவே இன்று முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் என தம்மை விளம்பரம் செய்யும் பயங்கரவாதிகளின் நெருங்கிய நண்பனான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு அரசியலில் நுழைவதற்கான அனமதிச்சீட்டினை வழங்கியது

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள்மூலமும், முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களின்
அறிக்கைகள்மூலமும், செயற்பாடுகள்மூலமும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அமைப்பில் பல பயங்கரவாதிகளை உள்ளடக்கியுள்ளமை நிரூபிக்கப்படுகின்றது. அத்துடன் சர்வதேசரீதியாக பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தியுள்ள பிரபாகரன் தலைமையிலான புலிகள் அமைப்புடன் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட உடன்படிக்கை முஸ்லிம் காங்கிரஸ் ஓர் பயங்கரவாத அமைப்பு என்பதனை மேலும் பறைசாற்றி நிற்கின்றது. எனவே இவ்வமைப்பினரின் விடயத்தில் இலங்கை அரசாங்கமும், பாதுபாப்புப் படையினரும் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம்.