

எததனை தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றாலும் அரசாங்கம் தனது இலக்கிலிருந்து சிறதளவேனும் பின்வாங்கவும் கூடாது, விட்டுக்கொடுக்கவும் கூடாது. பயங்கரவாததினை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் மேற்குலக நாடுகள் காலங்காலமாக தமது இரட்டைவேடத்தினையே கடைப்பிடிப்பது தெற்காசிய மக்கள் அனைவரும் அறிந்த விடயமே. இந்நிலையில் சாவதேச முன்னணிநாடுகளெனக் கூறப்படும் 31 நாடுகளில் விடுதலைப் புலிகள் என தம்மை அடையாளப்படுத்தியுள்ள ஆயுத அமைப்பினரை பயகரவாதிகள் என அறிமுகப்படுத்தப்பட்டு அவர்கள் எவரும் வன்னிக்காட்டைவிட்டு வெளியுலகத்திற்கு வெளியேறாதவாறு தடைசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரதும், அரசியல்வாதிகளினதும், அப்பாவிப் பொதுமக்களினதும் உயிர்களைப் பலிகொண்ட தொடர்ந்தும் பலிகொள்வதில் தமது பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்ளும் பாஸிஸப் புலிகளுடன் அரசாங்கம் எக்காரணங்கொண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளில் தம்மை இணைத்துக்கொள்ளக்கூடாது. புலிப்பயங்கரவாதிகளுடன் பேச்சவார்த்தை ஒன்றில் ஈடுபட்டு குறைந்தபட்சம் ஒரு கிராமச்சபையின் ஆட்சி அதிகாரத்தினைக்கூட அவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முன்வருமேயானால் அவ்விடயம் முழுமையான இலங்கைத்தீவின் அழிவிற்கும் வழிவகுக்கும் என்பதனை நாம் உறுதிபடக் கூறிவைக்க விரும்புகின்றோம்.
பாஸிஸப் புலிகளுடன் அரசாங்கம் எப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்பதனை களுகுக் கண்களுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சிங்களப் புலிகளான ரணில் விக்கிரமசிங்காவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒருசாராரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினரின் தலைமையிலான ஒருசாராரான முஸ்லிம் புலிகளும் பாஸிஸப் புலிகளுடன் கைகோர்த்து நாடு தழுவியரீதியில் கலவரங்களை தூண்டிவிடுவதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று புலிகளின் ஆயுதப்பலத்தினை 80 வீதத்திற்குமேலாக அழித்தொழித்துவிட்ட ராஜபக்ஸா தலைமையிலான பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தமது தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன்மூலம் மிக விரைவில் புலிப்பயங்கரவாதிகளின் வரலாற்றினை முற்றுமுழுதாக அழித்தொழித்துவிடமுடியமென நாம் நம்புகின்றோம்.
இலங்கையில சமாதானமாகவும், சகோதரத்துவத்துடனும்,நிம்மதியாகவும் வாழ்வதற்கு விரும்பும ஒவ்்வொர இலங்கை பிரஜையும் முக்கியமாக சிங்களமக்களும் புலிப்பயங்கரவாதத்தினை்தோற்கடிப்பதற்கு தமத முழுமையான ஆதரவினை வழங்கத்தவறும் பட்சத்தில சிங்களமக்களுக்கென இருக்கும் ஒரேயொரு நாட்டினையும் இழந்து நாடற்றவரகள்் என்னும் நிலைக்கு உள்ளாக்கப்படுவது உறுதியாகும்