பல்லுப்போன புலியும் சொல்லுப்போன புலியும் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக எதிரும், புதிருமான ஊர்வலம் (10-06-08) நடாத்தவுள்ளனர்.

காமன்வெல (commonwealth )அமைப்பில் அங்கம் வகிக்கும் 10 நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடும் மகாநாடு லண்டனில் இடம்பெறும் நிலையில் அந்நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் விசேடமாக பிரித்தானிய பிரதமர் திரு கோல்டன் பிரவுண், இலங்கை ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றினை எதிர்வரும் (10-06-08)ந் திகதியன்று மேற்கொள்வதற்கு லண்டனைத் தளமாகக்கொண்டியங்கும் பல்லுப்போன புலிகளும் சொல்லுப்போன புலிகளும் திட்டமிட்டுள்ளனர். வல்வெட்டித்துறை முதல் பாணமைவரையான பகுதிகளை தமது பயங்கரவாத அடக்குமுறையின்கீழ் ஆட்சிசெய்த புலிகளுக்கு இந்தியாவும், அதனைத் தொடாந்து சர்வதேச நாடுகள் பலவும் பயங்கரவாதத்தினை கைவிட்டு ஜனநாயக வழிமுறையின்கீழ் அதிகாரபீடத்தில் அமர்வதற்கான பலதரப்பட்ட வாய்ப்புகளை வழங்கியபோதும் அந்த ஐந்தறிவு ஜீவன்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை

இலங்கை –இந்திய உடன்படிக்கை, பிரேமதாசா –புலி உடன்படிக்கை, சந்திரிகா –புலி உடன்படிக்கை, ரணில் –பிரபாகரன் உடன்படிக்கை போன்ற உடன்படிக்கைகளை மேற்கொண்ட ஐந்தறிவு ஜீவன்கள் அத்தனை உடன்படிக்கைகளையும் உதாசீனம் செய்த நிலையில் மஹிந்த ராஜபக்ஸாவையும் அதே பாணியில் ஏமாற்றமுடியுமென கண்ட கனவு கானல்நீராக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா எமது பெரிய அன்னை, ஐரோப்பா எமது மூத்த அண்ணன், அமெரிக்கா எமது உடன்பிறப்பு என்றெல்லாம் புதிய பாடல்களை இசைக்கமுற்பட்டும் நிலையிலும் உலகின் எந்தவொரு நாடும் புலிப்பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்க முன்வரவில்லை. இன்று இலங்கைப் பாதுகாப்புப்படையின் ஆழ ஊடுருவும் அணியினர் முறிகண்டி, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களுக்குள் ஊடுருவி கண்ணிவெடிகளைவைத்த தமது மக்களை படுகொலைசெய்வதாக ஒருபுறம் சர்வதேச நாடுகளிடம் ஓலமிடும் புலிகள் மறுபுறம் வன்னி நிலப்பரப்பு முழுவதும் தமது பூரண கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருப்பதாகவும் சிங்களப் படைகள் தம்மை நெருங்கமுடியாதெனவும் தம்பட்டமடிக்கின்றனர்.

புலிப்பயங்கரவாதிகளின் முக்கியஸ்தர்கள் அனைவருக்குமான சவக்குழிகள் வெட்டப்பட்டுவிட்ட நிலையில் ஆறு மாதகால அவகாசத்தினை ராஜபக்ஸாவின் தலைமையிலான பாதுகாப்புப் படையினர் வழங்கியுள்ளனர். ஒருபுறம் புலிகளுக்கான சவக்குழிகள் வெட்டப்பட்டுவிட்டநிலையில் மறுபுறம் தாயகத்தில் புலிகளுடன் இணைந்து வன்முறையில் ஈடுபட்டு பல கொலைகளையும், கொள்ளைகளையும், தாலி அறுப்புக்களையும் மேற்கொண்டநிலையில் மேற்குலகநாடுகளுக்கு தப்பியோடிவந்து புலிகளின் நிதிதிரட்டும் முகவர்களாக பணியாற்றிய பலரை கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் அவர்கள்மீது புலிப்பயங்கரவாதிகளுக்கு பணம், ஆயுதங்கள் யுத்த உபகரணங்கள் போன்ற பலவற்றை வழங்கியதாக கைதுசெய்து அரசவிருந்தினர்களாக தடுத்து வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று இலங்கை அரசின் தலைவருக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினை மேற்கொள்ள புலம்பெயர் நாடுகளில் வாழும் புலிப்பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்றாலப் புலிகள் ஒருபுறம் ஆர்ப்பாட்ட ஊவலத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவர்களின் முற்காலப் புலிகளும், முகமூடியணிந்த பிரித்தானிய தமிழர் ஒன்றியம் என்னும் பெயரில் இயங்கும் புலிகளும் தாமும் மறுபுறம் ஓர் ஊர்வலத்தினை மேற்கொள்வதற்கு மின்னஞ்சல் மூலம் பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பாஸிஸப் புலியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இடம்பெறும் வெற்றிடத்தினை தாம் அபகரிக்கமுடியுமென கனவு காணும் இக்கூட்டத்தினர் ஏற்கனவே ஆயுதக்குழுக்களில் அங்கம்வகித்தபோது பலதரப்பட்ட கொலை, கொள்ளை போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வெற்றிகண்ட அனுபவ சாலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் (28-02-2001) தடைசெய்யப்பட்ட புலிகளை, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் மேலும் 24 நாடுகளும் கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டு தடைசெய்துள்ள நிலையில் பிரித்தானியாவில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்த பிரித்தானிய அரசு அனுமதி வழங்குமானால் அதுவிடயம் அந்நாட்டின் பயங்கரவாதம் தொடர்பான இரட்டை வேடத்தினை வெளிக்காட்டுவதாகவே அமையுமென நாம் கருதுகின்றோம். ---நன்றியுடன் குமாரதுரை