பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் தற்போது தொடர்ந்து தமிழ் சினிமா படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அண்மையில் ரஜினியின் குசேலன், விஜயகாந்தின் எங்கள் ஆசான், விஜய்யின் வில்லு, சுந்தர்.சி-யின் ஐந்தாம் படை என பல படங்களின் சூட்டிங் நடைபெற்று முடிந்துள்ளது.
இதுதவிர மலையாள, தெலுங்கு படங்களின் படப்பிடிப்பும் நடந்தது. தொடர்ந்து பல படங்களின் சூட்டிங் நடைபெறுவதற்காக இடங்களை தேர்வு செய்து வருகின்றனர்.
தவமாய் தவமிருந்து படத்தை தயாரித்த சிருஷ்டி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் சுந்தர்.சி, மீனாட்சி, நமீதா, விவேக் உள்பட பலர் நடிக்கும் பெருமாள் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் கடந்த 25 நாட்கள் நடை பெற்றது.
இதில் சுந்தர் சி., நமீதா நடித்த கிளு கிளுப்பான குத்தாட்ட பாடல் காட்சி பொள்ளாச்சி அருகே ஒரு வாரமாக படமாக்கப்பட்டது. மு.க.முத்துவின் மகன் அறிவுநிதி பாடிய பாடலை டைரக்டர் வின்சென்ட் செல்வா பட மாக்கினார்.
சுந்தர் சி., நமீதா நடித்த கிளுகிளுப்பான பாடல் காட்சியை காண சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். இப்பாடல் காட்சி நேற்றுடன் முடிவடைந்தது.
இதனையடுத்து பெருமாள் பட சூட்டிங்கும் முழுமையாக முடிந்து விட்டது எனவும் பாடல் கேசட்டை தமிழக முதல்வர் கருணாநிதி மூலம் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
அதேபோல் சிம்பு, சினேகா, பிரபு நடிக்கும் சிலம்பாட்டம் படப்பிடிப்பும் பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றது.
இரு வேடங்களில் நடிக்கும் சிம்பு கோவில் குருக்களாக வரும் கேரக்டர் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் படமாக்கப்பட்டது.
இதில் தமிழ் என்றால் நான் என தொடங்கும் பாடல் காட்சியில் சிம்பு, மும்பை நடிகை ரஷ்னா மற்றும் 100-க்கும் மேற்பட்ட துணை நடிகர்களுடன் நடித்தார்.
கோவில் திருவிழா போல் பிரமாண்டமான செட் போடப்பட்டு 1 வாரமாக இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அவ்வப்போது நடிகர் சிம்பு பாடல் நடன அமைப்பு குறித்து அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்.
பாடல் காட்சியை விரைவில் முடிப்பதற்காக கால் வலியுடன் சிம்பு நடனமாடினார். நேற்று டன் சிலம்பாட்ட சூட்டிங் பொள்ளாச்சியில் முடி வடைந்தது. சிம்புவை பார்க்க ஏராள மானவர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.