மாற்றுத்தலைவன் இல்லை - ஒரே ஒரு தலைவன் - ஏகப்பிரதிநிதி - சிறப்பாக வளி நடாத்தும் ஒரே ஒரு தலைவன் பிரபாகரன் தான் என்பதில் மாற்றுக் க

vellupillai-prabhakaran-1_15.jpgஒரு பயங்கரவாதியும் இரண்டு பொதிசுமக்கும் கோவேறு கழுதைகளும் மாற்றுத்தலைவன் இல்லை - ஒரே ஒரு தலைவன் - ஏகப்பிரதிநிதி - சிறப்பாக வளி நடாத்தும் ஒரே ஒரு தலைவன் பிரபாகரன் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.--துஸியந்தன்

ஜேர்மணியில் தமிழ் பாஸிஸக் கூட்டமைப்பு பாராளுமண்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி பகிரங்கமாகத்தெரிவிப்பு ஜேர்மனியில் புலிகளின் ஆதரவாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொங்கு தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி பல விடயங்களை ஜேர்மனி வாழ் மக்களுக்கு சொல்லியிருந்தார்.

ஜேர்மன் நாட்டு சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து புலிகளுக்கான பிரச்சாரங்களை மேற்றுகொள்ளுமாறும் அதே நேரம் மிகவிரைவில் தமிழீழம் மலரக்கூடிய இறுதிக்கட்டத்தில் தாம் இருப்பதாகவும் ( யார் என்று தெரியாது ) போராளிகளும் தளபதிகளும் தலைவரின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ள ஜெயானந்தமூர்த்தி சுமார் 50.000 ஆயிரம் இலங்கைப்படையினர் வன்னிக்குள் இருந்து வெளியேறவும் முடியாமல் முன்னேறவும் முடியாமல் தத்தளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்களின் நலன் கருதிய தமது போராட்டத்தில் ( யார் இந்த தாம் என்பது புரியவில்லை ) மக்களுக்காகவே கிழக்கில் இருந்து புலிகள் பின்வாங்கியதாகவும் இவ்வகையான பின்வாங்கல் ஒரு தற்காலிக நடவடிக்கையே தவிர நிரந்தரமான பின்வாங்கல் இல்லை எனவும் மேலும் கூறியுள்ளார்.
தொடர்ந்து உரைநிகழ்த்திய ஜெயானந்தமூர்த்தி புலிகளின் பலம் பொருந்துவதற்கும் உலகில் போராடிய போராட்ட அமைப்புக்களில் முதன் முதல் விமானப்படையை உருவாக்கி விமானத்தாக்குதலை புலிகள் நாடாத்துவதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களே முக்கிய காரணம் எனத்தெரிவித்துள்ள ஜெயானந்தமூர்த்தி இறுதிக்கட்டத் தமிழீழப்போராட்டத்திற்கு தொடர்ந்தும் புலம் பெயர் தமிழ் மக்கள் பாரிய அளவில் உதவிகளை வழங்குமாறும் இன்னும் குறுகிய காலத்திற்கு மட்டுமே இவ்வுதவி தேவையென்றும் தமிழீழம் மலர்ந்தபின்பு அவ்வுதவி தேவையில்லை எனவும் மிக அழகாகக்கூறியுள்ளார்.

இவ்வளவு கதைகளையும் புலம் பெயர்ந்து ஜேர்மனியில் வாழும் தமிழர்களுக்கு கூறிய பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தான் கூறிய கனவுலகக்கதைகளை ஒரே வினாடியில் கண்திறந்து நிஜத்திலும் தனது சுய புத்தியிலும் தமிழ் மக்களுக்கு மாற்றுத்தலைவன் இல்லை ஒரே ஒரு தலைவன் ஏகப் பிரதிநிதி சிறப்பாக வழிநடாத்தும் ஒரே தலைவன் பிரபாகரன்தான் என்பதில் வேறுவித கருத்து இல்லை என மிகவும் துணிவாகவும் பகிரங்கமாகவும் முதற்தடவையாக தனது வாயால் புலம் பெயர்ந்து ஜேர்மனியில் வாழும் தமிழ் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

ஜெயானந்தமூர்த்தி தமிழ் நெற் இணையத்தளத்தின் செய்தியாளராக பணிபுரிந்த ( ஊதியத்திற்காக ) காலங்களில் என்னுடன் மிகச்சிறியளவிலான நட்புறவை வைத்திருந்தவர் என்ற வகையில் நான் அவருக்காக வேதனைப்படுகின்றேன்.

பாராளுமன்றத்தில் புலிகளின் பிரதிநிதியாக செயற்படும் இவர் ஜேர்மனியில் பிரபாகரனை இந்தளவு தூரம் தூற்றிவிட்டு மீண்டும் நாடு திரும்பாமல் தனது மனைவி குழந்தைகள் வாழும் லண்டனில் நிரந்தரமாகவே தங்கிவிடுவது அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் நல்லதாக அமையும் . மாறாக நாடு திரும்புவாராக இருந்தால் பாவம் சில நாட்களில் ஜெயானந்தமூர்த்தியும் மா மனிதர் பட்டம் பெற்றுவிடுவார் என நினைக்கும்போது மனவேதனைப்படுவதை விட வேறு என்ன செய்ய முடியும்?

அதே தினத்தில் உரை நிகழ்த்திய மற்றுமோர் தமிழ் பாஸிஸக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான அரியநேந்திரன் மிகவும் நகைச்சுவையாக பல விடயங்களை தெரிவித்தபோதிலும் அவரது நகைச்சுவையிலும் பல உண்மைகள் வெளிவந்தன. அதாவது அகிம்சைக்கு மதிப்பளிக்காத சிங்கள அரசுகளின் நடவடிக்கைகளினால் பல இயக்கங்கள் தமிழ் இனத்தின் விடிவிற்காக ஆயுதம் போராடியதாகவும் இலங்கை மற்றும் ஆசிய வல்லரசு நாடான இந்தியாவின் சதி வலைகளில் சிக்கி போராட்டத்தில் இருந்து விலகியதாகவும் தெரிவித்த அரியநேந்திரன் அவர்கள் தானும் ஒருகாலம் தன்னை ஊடகவியலாளன் எனக்காட்டித்திரிந்தைக்கூட மறந்து தந்தை செல்வா இலங்கை அரச தலைவர்களுடன் செய்து தோல்வி கண்ட ஒப்பந்தங்களையும் பிரபாகரன் ரணில் விக்ரமசிங்கவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் ஒப்பிட்டு பேசியதோடு மட்டுமல்லாமல் இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடக்கம் நோர்வே நாட்டின் அனுசரனை வரை தமிழர் தரப்பு ஒருபோதும் தவறிளைத்தது கிடையாது எனக்கூறி தமிழ் இனத்தையே வெட்கித்தலைகுனிய வைத்தார்.
மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கூறியதில் தந்தை செல்வா செய்துகொண்ட ஒப்பந்த காலங்களில் தமிழ் இனம் ஒப்பந்தத்தில் இருந்து விலகும் காரணத்தை ஏற்படுத்தியவர்கள் இலங்கை அரச தரப்பினரே என்பது மறுக்கப்படமுடியாத உண்மையே ஆனால் பிரபாகரன் தலைமையிலான புலிகள் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் குழப்பியடித்து தமிழினத்தை சீர்குலைத்தவர்கள் புலிகள்தான் என்பதை அவர் எவ்வாறு மறந்தார் என்பதுதான் வியப்பாக உள்ளது.

ஜே ஆர் ஜெயவர்த்தனாவை விடுவோம் அதன் பின்பு வந்த பிரேமதாச புலிகளுக்கென கொழும்பு ஹில்ட்டன் ஆடம்பர ஐந்து நட்சத்தர விடுதியில் மாத்தையா என அழைக்கப்பட்டு பிரபாகரனினால் படுகொலை செய்யப்பட்ட மகேந்திரராசா மற்றும் பல காலம் புலிகளின் சிறையில் இருந்து தற்போது சமர் ஆய்வுப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கிட்டுவின் சதியால் கொலை செய்யப்பட்ட பொன்னம்மான் ( குகன் ) அவர்களின் சகோதரன் யோகரட்ணம் யோகி ஆகியோர்களுக்கு ஆடம்பர வாழ்வு கொடுத்து ரத்மலான விமானத்தளத்தில் இவர்கள் இருவரும் வந்திறங்கிய உலங்கு வானூர்திக்கு அதே விமானத்தளத்தில் புலிகளின் ஆயுதம் தாங்கியவர்கள் பாதுகாப்பளிக்கும் அளவிற்கு இடம் கொடுத்த பிரேமதாசவை யார் கொலை செய்தது என்பதோ இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக ஒட்டு மொத்த இலங்கை வாழ் தமிழர்களுக்கு கிடைக்கவிருந்த சந்தர்ப்பத்தையோ அல்லது ரணிலுடன் செய்து கொண்ட செல்லுபடியாகாத ஒப்பந்தத்தையோ புலிகளே குழப்பியடித்து தமிழர்களின் விடி வாழ்வுக்கு இடி வாழ்வு கொடுத்தவர்கள் புலிகள் என்பதையும் மறந்து பேச்சுவார்த்தைக்கு வா எண்று இலங்கை அரசு கூறும் கதைக்கு சர்வதேசம் தலையாட்டுகின்றதாம் இந்தியா வாலாட்டுகின்றதாம் என மிகவும் நகைச்சுவையாக உரை நிகழ்த்தினார்.

இலங்கையிலிருந்து மிக நீண்ட நேரம் விமானத்தில் பறந்து ஜேர்மனியில் உரை நிகழ்த்திய இவர்கள் கொழும்பில் இருந்து 6 மணி நேரத்திற்குள் தமது சொந்த இடமான வாளைச்சேனக்கும் அம்பளாந்துறைக்கும் சென்று இவ்வகையான கருத்துக்களை கூறினால் தமக்கு எவ்வகையான பதில் கிடைக்கும் என்பதை நன்கு புரிந்துகொண்டே விமானமூலம் கடல் கடந்து வந்து ஜேர்மனி வாழ் தமிழர்களுக்கு கதையளந்து இளைப்பாறுகின்றார்கள்.

கௌரவ பாராளுமண்ற உருப்பினர்களான ஜெயாந்தமூர்த்தி மற்றும் அரியநேந்திரன் ஆகியோரே தயவுகூர்ந்து ஒன்றை நினைவு கூர்ந்துகொள்ளுங்கள் சிலரை சிலகாலம் ஏமாற்றலாம் பலரை பலகாலம் ஏமாற்றலாம் ஆனால் எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்றமுடியாது குறிப்பாக தமிழ் மக்களை இனி ஒருபோதும் ஏமாற்றமுடியாது.

அரியநேந்திரன் கூறிய இந்தியா வாலாட்டும் கதையைப்போன்று மட்டக்களப்பு மக்களினால் தெரிவுசெய்யப்ப்ட்ட கிங்ஸ்லி இராசநாயகத்தினை புலிகள் படுகொலை செய்த்ததன் மூலமாக தனக்கு கிடைத்த பாரளுமன்றப்பதவிக்காக நண்றியுள்ள நாயாக புலிகளுக்கு அவர் தாராளமாக வாலாட்டும் உரிமை அவருக்கே உரித்தான ஜனநாயக உரிமையாக கருதுவதோடு நிறுத்திக்கொண்டு எம்மின மக்களை நின்மதியாக வாழ விடுவதே அவர்கள் தமிழினத்திற்கு செய்யக்கூடிய ஒரே ஒரு உதவியாகும்

துசியந்தன்