பாடசாலைகளில் நூலகம் நடிகா சூர்யா அமைக்கிறார்

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி, சிவகுமார் தலைமையில் பிலிம் சேம்பரில் நேற்று நடந்தது. உதவி தொகைகளை வழங்கி சூர்யா பேசியதாவது: எங்கள் வீட்டில் பிறந்த நாள் விழா, குலதெய்வ கோவில் விழா ஆண்டுதோறும் தவறாமல் நடக்கிறது என்று கூற முடியாது. ஆனால் இந்த நிகழ்ச்சி மட்டும் 29 வருடமாக தொடர்ந்து நடந்து வருகிறது.

நம் நாட்டில் 11 கோடி குழந்தைகள் படிக்க வேண்டிய வயதில் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். படிப்பு ரொம்ப முக்கியம். அதை இன்னும் பலர் உணராமல் இருக்கிறோம்.

பாடசாலைளிகள் உள்ள ஊர் மக்களின் ஒத்துழைப்போடு பல பணிகளை செய்ய திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு பாடசாலையிலும் நூலகங்கள் அமைக்கிறோம். இந்த நூலகங்கள் மாணவர்களை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்லும். மாலை நேரங்களில் மாணவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் மூலமாக ஒரு ஆசிரியரைக் கொண்டு டியூஷன் நடத்த இருக்கிறோம். இந்த சூர்யா, நான் போட்டிருக்கிற சட்டை, இந்த சமுதாயம் கொடுத்தது. அவர்களுக்கு, இன்னொரு தாய் தந்தையருக்கு பிறந்த எனது சகோதர சதோதரிகளுக்கு நான் திரும்ப செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பிளஸ்&2 தேர்வில் முதலிடம் பெற்ற மற்றும் ஏழை, எளிய மாணவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் கல்வி உதவி தொகையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. திண்டிவனம் தாய்தமிழ் பாடசாலைக்கு வழங்கப்பட்ட 2 லட்சம் ரூபாய் நிதியை அதன் பொறுப்பாளர் பேராசிரியர் கல்யாணி பெற்றுக் கொண்டார்.