1987 யூலை மாதம் 29 ந் திகதி ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய உடன்டிக்கையைத் தொடாந்த ஒரெயொரு தடவை வன்னிக் காட்டிற்குள் சென்று பிரபாகரனை சந்தித்தவர் அனிதா பிரதாப். இந்நிலையில் பிரபாகரனிடம் இருக்கும் அரசியல் ஞானத்தினையும், அவரது போராட்ட வியூகங்களையும் வானளாவப் புகழும் பிரதாபைவிட 1981 ம் ஆண்டுமுதல் 2004 ம் ஆண்டுவரை புலிகள் அமைப்பின் விசேட கொமாண்டராக பணியாற்றிய கருணா அம்மான் பிரபாகரன்பற்றி தெரிவித்திருப்பது என்ன என்பதனை வாசகர்கள் அறிந்து கொள்வது பலனுள்ளதாக அமையலாம். விநாயகமூர்த்தி முரளீதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் அவர்களால் தற்சமயம் வெளியிடும் தகவல்கள் உண்மைக்குப்புறம்பானவைகள் என புலிகளும், புலிகளின் புலம்பெயர் பக்தர்களும் கூறமுற்படும் நிலையில் அவர்களிடம் நாம் விடுக்கும் ஒரேயொரு வினா? கருணா அம்மானின் வெளியேற்றத்திற்குப் பின்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல்கள் எவை? அவற்றிற்கான முழுமையான பதில்களையும் அறிய விரும்பும் வாசகர்கள் (www.suruthifm.com) என்னும் வானொலியின் தகவலை கேளுங்கள்
அனைத்துலக அரசியலில் தீர்க்கமான ஞானம் கொண்ட பிரபாகரன் தனது அடுத்து நகர்வினை முன்னெடுப்பதற்கு அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். அந்தவகையில் சிறிலங்கா அரசின் தற்போதைய போருக்கு அடுத்த வருடமே புலிகள் பதிலளிப்பார்கள் என்று பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் எதிர்வு கூறியுள்ளார்.
புலி தனது அழிவின் விழிம்பிற்கு சென்றுவிட்டநிலையில் புலம்பெயர் நாடுகளில் சொகுசான வாழ்க்கையினை அமைத்துக்கொண்ட சில கூத்தாடிகளைவைத்து பிங்கு தமிழ் நிகழ்வுகளையும் தமிழகத்தின் வங்குறோத்து அரசியல் நடாத்தும் வை.கோபாலசாமி, திருமாவளவன், பழ நெடுமாறன் போன்ற சிலரின் தயவிலும் இன்று தமிழீழம் காண்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாகவே அனிதா பிரதாப்பின் பங்களிப்பும் பெறப்பட்டுள்ளது