தேர்தல் ஆணையாளரின் அங்கீகாரமில்லாத தமிழக சிறுத்தை 100 தொகுதியில் தனித்துப் போட்டி: திருமாவளவன்

Puli_and_Siruthai_11_0.jpgதமிழகத்தில் 100 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு வாக்கு வங்கியை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளதாக தமிழகப் பயங்கரவாத அமைப்பான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
தேனியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:தமிழகத்தில் தி.மு.க.வுக்கு 24 சதவீத வாக்கு வங்கி உள்ளது. அ.தி.மு.க.வுக்கு 24 முதல் 26 சதவீதம் வாக்கு வங்கி உண்டு. காங்கிரஸ் கட்சிக்கு 6 முதல் 8 சதவீதம் வாக்குகள் உண்டு.
ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கடலூர் மாவட்டத்தைத் தவிர மற்ற இடங்களில் நிலையான வாக்கு வங்கி கிடையாது. இதனால் நிலையான வாக்கு வங்கியைப் பெற விடுதலைச் சிறுத்தைகள் 100 இடங்களிலாவது தனித்துப் போட்டியிட வேண்டும். அப்போதுதான் நிலையான வாக்கு வங்கியை நிர்ணயிக்க முடியும்.
2011-ல் தேர்தல் ஆணையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் பெற வேண்டும். அப்போதுதான் கட்சிக்கு தனிச் சின்னம் கிடைக்கும். 2006 பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருந்தால் அங்கீகாரம் பெற்றிருக்க முடியும் இவ்வாறு பிரபாகரனின் தலைமையிலான பாஸிஸப் புலிகளின் தயவில் தமிழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்