கூலிக்கு மாரடிக்கும் புலியின் புலம்பெயர் பக்தர்கள் புலிகள் அமைப்பு ஓர் Nazis என அடையாளப்படுத்தியுள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலிகள் என தம்மை அழைக்கும் பிரபாகரன் தலைமையிலான பாஸிஸப் புலிகளை நாஸிக் கட்சியென புலம்பெயர் புலிகள் அடையாளப் படுத்தியுள்ளனர். தமிழர்களுக்கு தனி ஈழம்கோரும் புலிகள் தாயகத்தில் வாழ்ந்த தமிழ்மக்களில் 10 லட்சம் மக்களை நாட்டைவிட்டு வெளியேற்றியநிலையில் வெளியேறியவர்களில் நாட்டில் எஞ்சியிருக்கும் தமது பெற்றோரையும், உற்றாரையும் தம்முடன் அழைத்துக்கொள்வதற்காக புலியின் பக்தர்கள் இலங்கையில் தமிழ்மக்களுக்கு அநீதி இடம்பெறுவதாக வெளிக்காட்டும் பிரச்சாரங்களை பொங்கு தமிழ் என்னும் பெயரில் மேற்கொள்கின்றனர். மேற்படி நிகழ்வுகளில் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் நாஸிஸ்டுகள் என்பதனை உறுதிசெய்துள்ளனர். அதன் அர்த்தம் புலிகளின் கனவுக்கன்னியான தமிழீழத்தில் தமிழர்களைத் தவிர வேறு எந்த ஒரு இனமும் வாழ்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதி 1990ம் ஆண்டில் பிரபாகரனால் நிறைவேற்றப்பட்டு வடமாகாணத்தில் வாழ்ந்த 33.149 சிங்கள மக்களும் ஏறக்குறைய 100.000 முஸ்லிம் மக்களும் உடமைகள் அனைத்தும் சூறையாடிய நிலையில் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்டார்கள். அதற்கமைய இன்று சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் அற்ற பிரதேசமாகவே வட மாகாணம் அமைந்துள்ளது. அதற்கு பரிகாரமாக அரசாங்கத்தின் பாதகாப்புப் படைத்தரப்பின் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த 48 ஆயிரம் படையினர் அங்கு நிரந்தரமாக நிலைகொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத அமைப்பான புலிகளின் விடயத்தில் மேற்குலக நாடுகள் கைக்கொள்ளும் இரட்டை வேடமானது ஆப்கானிஸ்தானில் அன்றைய சோவியத் படையினருக்கு எதிராக தலிபான்களை பயன்படத்தியதனால் அவர்களுக்கு (மேற்கு நாடுகளுக்கு) இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைபோன்றும், ஈரானுக்கு எதிராக அன்று சதாம் உசைனுடன் கைகோர்த்து இன்று ஈராக்கில் பல ஆயிரம் படையினரை பலிகொடுத்த நிலைபோன்றும் விரைவில் புலிகளின் பயங்கரவாதம் மேற்குலக நாடுகளின் அழிவிற்கு வழியமைக்கும் என்பது வரலாற்றின் யதார்த்தமாகும். பயங்கரவாதிகளின் விடயத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஏனைய மேற்கலக நாடுகள் பின்பற்றத் தயங்குவதன் மர்மம் என்ன என்பது புரியாத புதிராகவே நோக்கப்படுகின்றது.