ஓமந்தை சோதனை சாவடியில் புலிப்பயங்கரவாதிகளக்கு சீருடை துணி, இரும்பு கம்பிகள் கடத்திய லொறிகள் கைப்பற்றப்பட்டுள்ளனன.

ஓமந்தை சோதனைச்சாவடியில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிசாரின் சோதனை நடவடிக்கையின் போது புலிப்பயங்கரவாதிகளுக்கு பொருட்களை கொண்டு செல்லப்பட்ட இரண்டு லொறிகளின் கூரைப் பகுதியல் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீருடைத் துணி, பெட்டறிகள் மறறும் இரும்புக் கம்பிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட லொறிகள் இரண்டும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற அரசாங்க அதிபர் பெயரிலான வாகனத் தொடரணியைச் சேர்ந்த இரண்டு லொறிகளிலேயே இந்தப் பொருட்கள் மறைத்து வைத்து கொண்டு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.