புலிப்பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்படும் கடத்தலை தடுக்க கடல் தீவுகளில் காவல் பணி

Ramesvaram_05-08_2.jpgபுலிப்பயங்கரவாதிகளின் கடல் வழியாக நடத்தப்படும் கடத்தலை தடுப்பதற்காக மன்னார் வளைகுடாவில் உள்ள ஆறு தீவுகளில் நிரந்தர காவல் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்களை புலிகள் கடத்தி செல்வது சமீபத்தில் அதிகரித்துள்ளது. போதை பவுடர்களில் இருந்து பீடி பண்டல்கள் வரை சர்வசாதாரணமாக கடத்தப்பட்டு வருகின்றன. இது தவிர விடுதலை புலிகளுக்கு தேவைப்படும் வெடிமருந்து பொருட்கள், பேட்டரிகள், சீருடைகள் அவ்வப்போது கடத்தப்பட்டு வருகின்றன. கடத்தல்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமம் மத்திய அரசால் சமீபத்தில் அமைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம், மண்டபத்திலும், தூத்துக்குடியில் தருவைகுளத்திலும் இந்த குழுமம் செயல்பட்டு வருகிறது. கடலில் ரோந்து செல்ல படகுகள் இல்லாததால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மட்டும் பாதுகாப்பு குழுமத்தினர் செய்து வந்தனர். எந்த பகுதியில் இவர்கள் கண்காணிக்கிறார்களோ அந்த பகுதியை தவிர்த்து விட்டு அடர்த்தியான தோப்புகள் மற்றும் புதிய பகுதிகளில் இருந்து கடத்தல்காரர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து கொண்டிருந்தனர். இந்த தகவல் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ஏ.டி.ஜி.பி.,ஜெகன் மோகன் சேஷாத்திரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின காப்பகத்தினரிடம் ஆலோசனை நடத்திய ஏ.டி.ஜி.பி., அவர்களுக்கு சொந்தமான படகில் வாரம் ஒருமுறை இருதரப்பினரும் இணைந்து கடலில் ரோந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார். தற்போது மண்டபம் மற்றும் தருவைகுளத்தில் இந்த ரோந்து பணி துவங்கியுள்ளது. இது தவிர மன்னார் வளைகுடாவிற்கு சொந்தமான 21 தீவுகள் ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரை உள்ள கடல் பகுதியில் உள்ளன. தடை செய்யப்பட்ட இந்த தீவுகளில் கடத்தல்காரர்கள் நுழைந்து பொருட்களை பதுக்கி வைத்து கடத்துவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

கீழக்கரையிலிருந்து புலிகளுக்காக பேட்டரிகள் கடத்தி சென்ற கடத்தல்காரர்கள் அதை முயல்தீவில் பதுக்கி வைத்திருந்தனர். இந்த தீவிலிருந்த ஒருலட்சம் பேட்டரிகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன. இது போன்று மற்ற தீவுகள் கடத்தல்காரர்களின் ஆக்கிரமிப்பில் சிக்காமல் இருப்பதற்காக நிரந்தர காவல் பணியில் வனத்துறையினரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முயல் தீவு, குருசடை தீவு, நல்ல தண்ணி தீவு உள்ளிட்ட ஆறு தீவுகளில் சீருடை அணிந்த வனத்துறை காவலர்கள் தங்கவைக்கப்பட உள்ளனர். இவர்கள் தங்குவதற்காக ரூ.5 லட்சம் மதிப்பில் தற்காலிக பிளாஸ்டிக் கூரை செட்கள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Ramanathapuram--2.jpgதறுதலைகளின் தமிழீழப் போராட்டத்தினால் தாய்மண்ணைவிட்டு ஓடி மணல் திட்டில் தவித்த அகதிகள் இந்திய கடற்படையினர் மீட்பு

தனுஷ்கோடி இரண்டாம் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்டு குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்த 11 அகதிகளை இந்திய கடற்படையினர் மீட்டனர். இலங்கை மன்னார் மற்றும் வவுனியாவை சேர்ந்த 7 பெண்கள் உட்பட 11 அகதிகள் நேற்று முன்தினம் பேச்சாலையிலிருந்து படகில் புறப்பட்டு நள்ளிரவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வந்திறங்கினர். நேற்று அதிகாலை ராமேஸ்வரம் டவுன்போலீஸ் ஸ்டேசன் வந்த அகதிகளிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர்களை முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

இலங்கை முல்லைத்தீவிலிருந்து நேற்று அதிகாலை சொந்தப்படகில் புறப்பட்டு வந்த 7 பெண்கள்,6 குழந்தைகள் உட்பட 18 அகதிகள் ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் வந்திறங்கினர். படகை பறிமுதல் செய்த கோயில் போலீசார் அகதிகளிடம் விசாரணை நடத்தி அவர்கள் பெயர்களை பதிவு செய்தனர். இதனிடையே தனுஷ்கோடி இரண்டாம் மணல் திட்டில் நள்ளிரவில் இலங்கை படகோட்டிகளால் இறக்கிவிடப்பட்டு குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்த 11 அகதிகளை இந்திய கடற்படையினர் மீட்டு ராமேஸ்வரம் கடற்படை முகாமிற்கு அழைத்து வந்தனர். இவர்களிடம் கடற்படை ஏரியா கமாண்டர் எஸ்.ஆர்.ஷின்டே விசாரணை நடத்தினார். கடற்படை முகாமில் அகதிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. பின்னர் இவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.