வன்னிக்கு தினமும் ஓமந்தையூடாக 20 லொறிகளில் அத்தியாவசியப் பொருட்கள்

Loory_24-07.jpgஉலகிலேயே பயங்கரவாதிகளுக்கும் உணவு கொடுத்து அவர்களையும் சராசரி மனிதர்களாக நேசிப்பதன்மூலம் சமூகத்தில் இணைக்கமுடியமென கருதிச்செயற்படும் ஒரெயொரு அரசு திரு மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் என்றால் அது மிகையாகாது அதற்கமைய இராணுவக் கட்டுப்பாடற்ற பயங்கரவாதிகளின் கட்டப்பாட்டில் இருக்கும் வன்னிப் பகுதிக்கு ஓமந்தை சோதனைச் சாவடியூடாக நாளாந்தம் 20 லொறிகளில் மண்ணெண்ணெய் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அரசினால் அனுப்பி வைக்கப்படுகின்றது. இதனை வவுனியா மாவட்ட அரச அதிபர் சி.சண்முகம் அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார். அதேவேளை 1987 ம் ஆண்டு பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குடாநாட்டில் வலுப்பெற்றபோது அன்றைய ஆளும் கட்சியான ஐ.தே.கட்சியின் ஜனாதிபதியான திரு ஜே.ஆர் ஜயவர்தனா அவர்கள் குடாநாட்டிற்கான முழுமையான பொருளாதாரத் தடையினை விதித்து அங்கு வாழ்ந்த மக்களை பட்டினி போடவைத்தமை முக்கியமான விடயமாகும். ஜே.ஆர் ஜயவர்தனாவினால் விதிக்கப்பட்ட பொரளாதாரத் தடையே இலங்கை இந்திய உடன்படிக்கை எற்படுவதற்கு ஒரு காரணமாகவும் அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இராணுவக் கட்டுப்பாடற்ற வவுனியா வடக்கு, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் மூன்று இலட்சம் மக்கள் உள்ளனர். இவர்களுக்கான அத்தியாவசிய உணவு வகைகள், மருந்துப் பொருள், மண்ணெண்ணெய் ஆகியன ஏ9 வீதி ஓமந்தை சோதனைச் சாவடி வழியாகவே அனுப்பி வைக்கப்படுவதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே துணுக்காய் மல்லாவி பிரதேசங்களிலிருந்து பெருமளவானவர்கள் இடம்பெயர்ந்து கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mahintha--2.jpgவடபகுதியை மீட்டெடுக்கும் வரை இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும் ஜனாதிபதி தெரிவிப்பு

எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் நாட்டைப் பாதுகாக்கும் முயற்சியிலிருந்து ஒரு அடிகூட பின்வைக்கப் போவதில்லையெனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடக்கை மீட்டெடுக்கும் வரை இராணுவ நடவடிக்கை வேகமாக முன்னெடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

சப்ரகமுவ வடமத்திய மாகாணங்களின் உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் உபதலைவர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு சுட்டிக் காட்டியுள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது;

""கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தாய் நாட்டைப் பாதுகாத்துத் தருமாறு நாட்டு மக்கள் எனக்கு ஆணை வழங்கினர். அவர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ஒரு போதும் சிதறடிக்கமாட்டேன். நாட்டைப் பாதுகாக்கும் பயணத்திலிருந்து நான் துளியளவும் பின்வாங்கப் போவதில்லை.

நாடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றது. ஆனால் அனைத்துப் பிரச்சினைகளையும் விட தாய்நாட்டை பாதுகாத்து மீட்டெடுப்பதற்கே நாம் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இது விடயத்தில் நாட்டு மக்கள் தொடர்ந்தும் எனக்கு தோள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடனேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.

கட்சி அரசியல் நிலைப்பாட்டுக்கு அப்பால் நின்று நாட்டைப் பற்றிச் சிந்திக்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றேன். வடக்கை மீட்டெடுக்கும் வரை யுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இதில் யாருக்கும் நான் அடிபணியப் போவதில்லை. நடக்கவிருக்கும் மாகாண சபைகளின் தேர்தலில் மக்கள் எமக்கே ஆதரவளிப்பர். காரணம் நாட்டைப் பாதுகாப்பதில் நாம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதே ஆகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.