புயங்கரவாதிகளான புலிகளுக்கு நிதி மற்றும் யுத்ததளபாடங்களை கொள்வனவு செய்து வழங்கியமை தொடர்பாக அவுஸ்திரேலியாவில் வர்த்தக கல்லூரி அதிபரான தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளளார். மெல்போன் நகரில் தனியார் வர்த்தக கல்லூரி ஒன்றை நடாத்தி வரும் துளசிதரன் சந்திரராஜா (வயது 34) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் புலிகளுக்கு ஆயுதங்கள் சேகரித்தார்கள் என்ற வழக்கு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ. இதனால் வழங்கப்பட்ட தகவலை ஆதாரமாக வைத்தே சந்திரராஜா அவுஸ்திரேலியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
பிற்போக்குத்தனங்களை தமிழினம் களைவது இன்றியமையாதது -காகிதத் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர்
போராட்ட காலத்தில் பிற்போக்குத்தனங்களை தமிழினம் களைவது இன்றியமையாதது என்று தமிழீழ அரசியல் பொறுப்பாளர் கூறியுள்ளார். நேற்றுப் புதன்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்ற ”உடையாத விலங்குகள்” நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்றிய தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தொன்மையான குடிகளாக தமிழினம் திகழ்கின்ற அதேவேளை தமிழ் மக்களிடையே பல்வேறு வகையிலான பிற்போக்குத்தனங்கள் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதியுள்ள நூல் இவற்றை தெளிவாக உணர்த்தி நிற்கும் அதேவேளை தமிழீழ விடுதலைப் போராட்டம் இடம்பெறும் இக்காலகட்டத்தில் பிற்போக்குத்தனங்களை தமிழினம் களைய வேண்டும் என்றும் பா.நடேசன் வலியுறுத்தியுள்ளார் அதே நிகழ்வில் நடேசன் கூறிய புலிகளின் பொன் மொழி கீழே தரப்பட்டுள்ளது.
உலகத்தில் முதல் தோன்றிய மாந்தர் இனம் தமிழர் என்றாலும் எமது சமூகத்தில் களையப்பட வேண்டியவர்கள் இருக்கின்றனர். இவற்றை களைவதன் ஊடாகத்தான் தேசிய விடுதலைப் போரை விரைவாக முன்னெடுக்க முடியும்