உலகம் சுற்றப்போகிறது அமிதாப் பச்சன் குடும்பம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மறக்க முடியாத சுற்றுலா என்ற தலைப்பில், உலகின் முக்கிய நகரங்களில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். இந்த நிகழ்ச்சியில், புவி வெப்பமயமாவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட உள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், 20 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக, பிரமாண்ட மேடை கலை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில், இந்த கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. முதல் நிகழ்ச்சி, டொரன்டோ நகரில் இம்மாதம் 18ம் திகதி துவங்குகிறது. அதைத் தொடர்ந்து, டிரினிடாட், லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா, சிகாகோ போன்ற நகரங்களிலும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

அமிதாப்புடன் அவரது மகன் அபிஷேக், மருமகளும், மாஜி உலக அழகியுமான ஐஸ்வர்யா ஆகியோரும், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடுகின்றனர். இந்த நிகழ்ச்சிகளின் போது, புவி வெப்பமயமாவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அமிதாப், "உலகம் முழுவதும் நூறு கிராமங்களுக்கு சோலார் விளக்குகளை தர முடிவு செய்துள்ளோம். புவி வெப்பமயமாவதை தடுக்க, சுற்றுச் சூழல் நிபுணர் பச்சோரி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவருக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார். இந்த கூட்டத்தில், சுற்றுச் சூழல் நிபுணர் பச்சோரி, நடிகர் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா பச்சன் ஆகியோரும் கலந்து கொண்டனர்