
நடிகை மனோரமா, டைரக்டர் பாலசந்தர் ஆகியோருக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் நீண்டகாலம் நிலைத்து சாதனை படைத்து வரும் கலைஞர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்க கலிபோர்னியா பல்கலைக்கழகம் முடிவு செய்திருந்தது.
ஆயிரக்கணக்கான படங்களில் நடித்து சாதனை படைத்து வரும் நடிகை மனோரமா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற சூப்பர் நடிகர்களை உருவாக்கிய டைரக்டர் பாலசந்தர் ஆகியோர் இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதற்கான விழா விரைவில் நடைபெறும் என்று பல்கலைக்கழக நிறுவனர் செந்தில்குமார், துணைவேந்தர்கள் பிரியன்லீ, பிராங் செரிங்கா ஆகியோர் தெரிவித்துள்ளனர்