புலிகளின் நிலைகளை இலக்கு வைத்து முல்லைத்தீவு பகுதியில் இரு விமானத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று காலை 6.10 மணியளவில் முல்லைத்தீவு மேற்கே அமைந்துள்ள புலிகளின் ஆயுத களஞ்சியங்களை இலக்கு வைத்து விமானப்படையினரின் ஜெட் ரக விமானங்கள் விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் மற்றுமொரு தாக்குதல் இன்று காலை 6.20 மணியளவில் புலிகளின் படகுகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகவும் இத்தாக்குதலில் புலிகளின் இரு படகுகள் தாக்கியழிக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது