

உலகிலேயே தலை சிறந்த விமான நிலையமாக, தொடர்ந்து ஏழாவது முறையாக ஹாங்காங் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.பிரிட்டனை சேர்ந்த ஸ்கைடிராக்ஸ் என்னும் நிறுவனம், ஆண்டு தோறும் சிறந்த விமான நிலையங்களை, பல்வேறு பிரிவுகளாக பிரித்து வெளியிட்டு வருகிறது. 10 மாதங்கள், பயணிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 80 லட்சம் பதில்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. ஷாப்பிங், உணவகங்கள், பணியாளர்களின் நடத்தை, லக்கேஜ் டெலிவரி, காத்திருக்கும் நேரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையில், 190 விமான நிலையங்கள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.
ஆசியாவை சேர்ந்த அனைத்து விமான நிலையங்களும் சிறப்பாக செயல்பட்டாலும், வசதிகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருப்பதால், சிங்கப்பூர் விமான நிலையத்தை பின்னுக்கு தள்ளி, ஹாங்காங் விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. 2006ம் ஆண்டைத் தவிர தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக ஹாங்காங் விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. 2006ம் ஆண்டு சிங்கப்பூரின் ஷாங்கி விமான நிலையம் முதலிடத்தை பிடித்தது. ஹாங்காங், சிங்கப்பூரை தொடர்ந்து கோலாலம்பூர், மலேசியா, ஜப்பானின் கன்சாய், ஜெர்மனியின் முனிச் விமான நிலையங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.