அரசியல்வாதிகளாலும், பயங்கரவாதிகளாலும் இன்று உண்ணாவிரதம் என்னும் பெயரில் மேற்கொள்ளப்படும் ஒருவேளை உணவினை உட்கொள்ளாத பட்டினிப் போராட்டம் அரசியல்வாதிகளால் தமது வாக்குவங்கியினை பாதுகாத்துக்கொள்வதற்கும், பயங்கரவாதிகளினால் தம்மால் மேற்கொள்ளப்படும் அப்பாவிமக்கள்மீதான படுகொலைகளையும், அராஜக செயற்பாடுகளையும் மூடிமறைப்பதற்கான ஓர் திரையரங்கு நாடகமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. மேற்படி நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மக்கள் எண்ணிக்கையில் ஒரு வீதமானவர்கள்கூட தம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக தமது உயிர்நீங்கும்வரை உண்ணாவிரதம் இருப்பதற்கு தயாரா? இல்லையேல் பிரச்சினைகள் அனைத்தையும் நீதியான, பக்கச்சார்பற்ற முறையில் பேசித் தீர்ப்பதே நாகரிகமாகும். இதனையே மேற்குலக நாடுகளின் ஆட்சியாளர்களும், மக்களும் மேற்கொள்கின்றனர். அதனைவிடுத்து எதிர்காலச் சந்ததியினரைக்கூட இதுபோன்ற எயிட்ச் தொற்றுநோய்க்கு ஆளாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதனை அறிஞர்களும், அறிவுஜீவிகளும் தவிர்த்துக்கொள்வது நாகரிக உலகிற்கு நன்மைபயக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

பல்லாயிரக்கணக்கான பாலகர்களையும், பதிவிரதைகளையும் தமது பதிவிவெறிக்காக பலிகொண்ட சர்வதேசப்பயங்கரவாதிகளான பிரபாகரன் தலைமையிலான புலிகள் அமைப்பு இந்திய அமைதிகாக்கும் படையினரை இலங்கையிலிருந்து வெளியேற்றவதற்கு 1987 நவம்பரில் திலீபன் என்னும் இளைஞர் ஒருவரின் உயிரையும் 1988.ல் பூபதி என்னும் பெண் ஒருவரின் உயிரையும் உண்ணாவிரதத்தின் பெயரால் பலிகொண்டார்கள். மகாத்மா காந்தியின் சாத்வீக வழியிலான போராட்டத்தினை முன்னெடுத்த புலிகளால் இன்றுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகளின் உயிர்கள் பலிகொள்ளப்பட்டுள்ளதே இதுவா அண்ணல் காந்தி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உண்ணாவிரதத்தின் உயர்வான நோக்கம்?
உண்ணாவிரத தகவல்கள்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு நடத்துவதை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரதம் நடத்துவது என்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று மாவட்ட தலைநகரங்கள் மற்றும் கடற்கரை நகரங்களில் இன்று காலை 8 மணி முதல் தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர். சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதம் நடந்தது. இதற்காக அங்கு பிரமாண்ட சாமியானா பநதல் அமைக் கப்பட்டிருந்தது.
முதல்-அமைச்சர் கருணாநிதி உண்ணா விரதத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எல்.பலராமன், ஜெ. அன் பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்பதற்காக காலையில் இருந்தே சேப்பாக்கத்தில் தொண்டர்கள் குவிந்தனர். அமைச்சர் பரிதிஇளம்வழுதி, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், திமு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
மகாபலிபுரத்தில் நடந்த உண்ணாவிரதத்துக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். வசந்திஸ்டான்லி எம்.பி. உள்பட பலர் பங்கேற்றனர். திருவொற்றியூரில் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர் கே.பி.பி. சாமி, வண்ணை தேவகி உள்பட ஏராளமானோர் உண்ணாவிரதம் இருந்தனர்.
முத்துப்பேட்டையில் மத்திய மந்திரி பழனிமாணிக்கம், மீமிசலில் மத்திய மந்திரி ரகுபதி, மரக்காணத்தில் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன், விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, வேதாரண்யத்தில் அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
நாகப்பட்டினத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. நெல்லை மாவட்டம் உவரியில் மத்திய மந்திரி ராதிகா செல்வி, ரகுமான்கான், பூம்புகாரில் அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடியில் திருச்சி சிவா எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கினார்கள்.
கோட்டைபட்டினத்தில் பெரியண்ணன்அரசு, புதுச்சேரியில் ஜானகிராமன் காரைக்காலில் நாஜீம் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. இது தவிர தஞ்சையில் அமைச்சர் கோ.சி.மணி, சேலம்-அமைச்சர் வீர பாண்டி ஆறுமுகம், வேலூர் காந்தி எம்.எல்.ஏ., திருவண்ணாமலை- வேணுகோபால் எம்.பி. பிச்சாண்டி எம்.எல்.ஏ., தருமபுரி-பெரியண்ணன், முல்லைவேந்தன், கிருஷ் ணகிரி-செங்குட்டுவன், கமலா காஞ்சிநாதன், திருச்சி-அமைச்சர் செல் வராஜ், பெரம்பலூர்- சிவசுப்பிரமணியம், கரூர்- வாசுகிமுருகேசன், கே.சி.பழனிசாமி, பரமத்தி சண்முகம், திண்டுக்கல்- அமைச்சர் பெரியசாமி, நாமக்கல்- நூர்ஜகான்பேகம், ஈரோடு-அமைச்சர் என். கே.கே.பி.ராஜா ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
கோவையில் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, கோவை ராமநாதன், நீலகிரியில் அமைச்சர் ராமசந்திரன், மதுரைமாநகரில் மாவட்ட தி.மு.க. செயலாளர் வேலுசாமி, கயல்விழி அழகிரி, மேயர் தேன் மொழி தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. மதுரை புறநகர் சார்பில் நடந்த உண்ணாவிரதத்துக்கு பி.மூர்த்தி எம்.எல்.ஏ. , தமிழரசி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
தேனியில் எல்.மூக்கையா, கம்பம் செல்வேந்திரன் ஆகியோர் தலைமையிலும் சிவகங்கையில் அமைச்சர் பெரிய கருப்பன், விருதுநகரில் அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன், பூங்கோதை ஆகியோர் தலைமையிலும் உண்ணாவிரதம் நடந்தது. இது போல் மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
ராமேஸ்வரத்தில் அமைச்சர் சுப.தங்க வேலன் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுமாலை 5 மணிக்கு இங்கு உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார்.
முன்னதாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவிகளை வழங்குகிறார். சென்னை உண்ணாவிரதத்தை அமைச்சர் அன்பழகன் முடித்து வைக்கிறார்.