அதிகாரபீடத்தில் அமருமுன்னரே ஆகானிஸ்தான் விஜயம் மேற்கொண்ட பரக் ஒபாமா

அமெரிக்க அரச அதிபர் தேர்தலில் போட்டியிடும் பரக் ஒபாமா மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.பரக் ஒபாமாவின் விஜயத்தில் முதல்கட்டமாக இன்று ஆகானிஸ்தான் சென்றுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக ஆகானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப்படையினருக்கும் தலிபான் குழுவினருக்கும் அவ்வப்போது மோதல்கள் நடந்து வருகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலிபான் குழுவின் துணைத்தலைவர் முல்லா பிஸ்முல்லா அகுண்டா படுகொலை செய்யப்பட்ட நிலையிலும் பரக் ஒபாமாவின் ஆகானிஸ்தான் விஜயம் குறிப்பிடத்தக்கது. ஆகானிஸ்தான் விஜயத்தை தொடர்ந்து ஈராகிற்கு விஜயம் செய்ய இருப்பதாக தொரிக்கப்பட்டுள்ளநிலையில் ஈராக்கில் பரக் ஒபாமாவிற்கான பாதுகாப்பு ஏற்பாட்டை குறித்தே அவரது ஈராக் பயணம் உறுதிசெய்யப்படும்