கனடாவில் வதிவிட அனுமதிபெறுவதற்காக புதிய யுக்தியை கையாண்ட 600 இளைஞர்களுக்கு அனுமதி மறுப்பு

Canada_0.jpgகனடாவில் எதிர்வரும் 11ஆம் நாள் முதல் 10 நாட்களுக்கு நடைபெறவுள்ள அனைத்துலக இளைஞர் காங்கிரஸின் பெயரால் மாநாட்டிற்கு சென்று அங்கு தமக்கான வதிவிட அனுமதியினைப் பெறுவதற்கு முற்பட்டமையை கண்டறிந்த கனடிய நிர்வாகம் 600 இளைஞர்களுக்கும் அங்கு செல்வதற்கான அனுமதியினை தமத தூதரங்கள் மூலம் நிராகரித்துள்ளன

இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையிலிருந்தும் சிறிய தொகையானவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம் போன்ற நாடுகளில் இருந்தும் செல்ல முற்பட்ட வர்கள் எனவும் அவ்வாறு செல்ல மற்பட்டவர்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

லண்டனில் வன்முறையில் ஈடுபட்ட 6 இலங்கைத் தமிழர்களுக்கு சிறைவாசம் .

லண்டனில் வன்முறையில் ஈடுபட்டதாக 6 இலங்கை தமிழர்கள் மற்றும் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கத்தியால் ஒருவரின் தலையை சீவி கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர்களுக்கு 3 முதல் 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 7 பேரும் தடிகள், கத்திகள் உள்ளிட்டவைகளை கொண்டு தாக்கியுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள் வரவேற்று போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்