சீனாவை உலுக்கிய புயல் மழை; 5 லட்சம் பேர் வீடு இழப்பு-தைவானில் 18 பேர் பலி

சீனா, தைவான் நாடு களை புயல் மழை தாக் கியது. தைவானில் 18 பேர் பலியானார்கள். சீனாவில் 5 லட்சம் பேர் வீடு இழந்தனர்.கடந்த 3 நாட்களுக்கு முன் தைவானை கடும் புயல் மழை தாக்கியது. ` கால்மீஜி' என்று பெயரிடப்பட்ட இந்த புயல் தாக்கியதிலும், பலத்த மழையாலும் இதுவரை 18 பேர் பலியாகிவிட்டனர். தைவானில் பல இடங் களில் நிலச்சரிவு ஏற்பட் டது. நிலச்சரிவில் நூற்றுக் கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. 2 நாட்களில் மட்டும் 39 அங்குலத்துக்கு மழை பெய்துள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து நூற்றுக்கணக்கான வீடுகளை மூழ்கடித்து விட்டது.

தைவானை தாக்கிய புயல் அத்துடன் ஒயவில்லை. சீனாவின் கிழக்கு பகுதியை அது பதம் பார்த்தது. கடலோர பகுதிகளை புயல் கடுமையாக தாக்கியதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்து விட்டனர். கடல் நீர் ஊருக்குள் புகுந்து ஏராளமான குடிசைகளை மூழ்கடித்து விட்டது. பலத்த மழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித் துள்ளது. ஷாங்காய் உள்பட பல்வேறு நகரங்களில் 72 கிலோ மீட்டர் வேகத்தில் சூறா வளி காற்று வீசி வருகிறது. புயலில் சிக்கிய 11பேரை காணவில்லை